வாலாஜாபாத்: நாயகன்பேட்டை, ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், நேற்று முன்தினம், ஊஞ்சல் உற்சவம் கோலாகலமாக நடந்தது. காஞ்சிபுரம் அடுத்த நாயக்கன்பேட்டை கிராமத்தில், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. நடப்பாண்டு ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம், பிற்பகல் 12:00 மணி அளவில், வேணுகோபால சுவாமி உபயநாச்சியாருடன் தோட்ட உற்சவத்தில் எழுந்தருளி, திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தன. அதை தொடர்ந்து, மாலை 6:30 மணி அளவில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இந்த ஊஞ்சல் உற்சவத்தில், ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.