ரூ.5 லட்சம் மதிப்பிலான சுவாமிகள் சிலைகள் பரிமுதல்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூன் 2015 11:06
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் போலீசார் வாகன சோதனையில் ரூ. 5 லட்சம் மதிப் பிலான சுவாமி சிலைகள் மற்றும் இரு வலம் புரி சங்குடன் சென்றவரை கைது செய்து விசாரிக்கின்றனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சுற்றுப்பகுதியில் பெருகி வரும் திருட்டை கட்டுப்படுத்த போலீசாருக்கு எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவிட் டிருந்தார். அதன் பேரில் நேற்று முன் தினம் இரவு திருத்துறைப்பூண்டி–வேதாரண்யம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசாரை கண்ட ஒருவர் தப்பி ஒட முயன்றார். அவரை பிடித்து போலீசார் விசாரித்ததுடன் அவர் வைத்திருந்த பையை சோ தனை செய்ததில், ஒரு அடி உயரமுள்ள அம்மன் சிலை ஒன்றும், ஒன்ன ரையுடி உயரமுள்ள விஷ்ணுபெருமாள் சிலை ஒன்று, அரையடியுள்ள அம்மன்சிலை, 10 cm உயரமுள்ள மாரியம்மன் சிலை என நான்கு சுவாமி சிலைகள், இரு வல ம்புரி சங்கு இருந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. விசாரனையில் அந்த நபர் தளிக் கோட்டகம் ராமக்கிருஷ்ன்(38), என்பதும் நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே நாகவுடையான் இருப்பை சேர்ந்த சின்னப்பிள்ளை என்பவர் கொடுத்தாக கூறினார். அதன் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.