பதிவு செய்த நாள்
24
ஜூன்
2015
12:06
பெங்களூரு: பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவின் ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளுக்கு
பயிற்சியளிக்கும் பணிகளை துவக்க, வனத்துறை தீர்மானித்துள்ளது.
வனத்துறை அதிகாரிகள் கூட்டம், மைசூரு தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி பரமேஸ்வர்
தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின், வனப்பாதுகாப்பு அதிகாரி பரமேஸ்வர் கூறியதாவது: தசராவுக்கு யானைகளை தயார்படுத்தும் பயிற்சிகளை துவங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு போல் இம்முறையும், 14 யானைகள், தசரா ஊர்வலத்தில் பங்கேற்கும். அர்ஜுன் யானை, அம்பாரி சுமப்பது உறுதியாகியுள்ளது. இத்துடன் பலராமன், அபிமன்யூ, பிரஷாந்த், கோபால சுவாமி, விக்ரம், காவேரி, துர்கா பரமேஸ்வரி உள்ளிட்ட யானைகளுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அக்., 22ம் தேதி, நடப்பாண்டு தசரா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் இறுதி வாரம் அல்லது செப்டம்பர் முதல் வாரம் யானைகளின் முதல் குழு, மைசூரு அரண்மனைக்கு அனுப்பப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.