அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூன் 2015 11:06
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவங்கியது. ரிஷிவந்தியத்தில் உள்ள பழமை வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த 21ம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் திருவிழா துவங்கியது. தொடர்ந்து 22ம் தேதி இரவு 8:15 மணியளவில், கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நாள்தோறும் இரவு 9:00 மணிக்கு சாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து 28ம் தேதி சுவாமி திருக்கல்யாணமும், 30ம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.