எல்லோரது மனதிலும் இரு விதமான சிந்தனை அடிக்கடி தோன்றும். ஒன்று பெரிய வேலையில் சேர்ந்து நிறைய பணம் சம்பாதித்து வாழ்வது. மற்றொன்று ஆன்மிகத்தில் ஈடுபடுவது. இந்த இரண்டுமே நன்மைக்கான வழி தான் என்றாலும், பணம் சார்ந்த வாழ்வில் மனிதனுக்கு கிடைக்கும் சந்தோஷம் தற்காலிகமானது. ஆன்மிக இன்பம் நிரந்தரமானது. எல்லோருடைய மனதிலும் இரண்டும் நிழலாடுகின்றன. விவேகம் உள்ளவன் சிரேயஸ் என்னும் ஆன்மிக வாழ்வையும், சாமானிய மனிதன் பிரேயஸ் என்னும் பணம் சார்ந்த வாழ்வையும் தேர்ந்தெடுக்கிறான் என்கிறது கட உபநிஷதம்.