எட்டயபுரத்தில் நடக்க இருந்த தம்பியின் திருமணத்தில் பங்கேற்க முத்துசுவாமி தீட்சிதர் மாட்டுவண்டியில் சென்றார். வழியில் பூமி வறண்டு கிடந்தது. அப்பகுதி மக்கள், விவசாயம், குடிநீர் இல்லாமல் வறுமையில் தவித்ததை பார்க்க முடிந்தது. இதைக் கண்ட தீட்சிதர் வருந்தினார். அம்பிகை மீது அமிர்தவர்ஷினி ராகத்தில் பாடத் தொடங்கினார். சிறிது நேரத்தில் குளிர் காற்றுடன் பெருமழை பெய்தது. எங்கும் சேறாகி விட்டது. தீட்சிதர் பயணம் செய்த வண்டிச் சக்கரமும் சேற்றில் புதைந்து விட்டது. அம்பிகை மீது மீண்டும் பாடல் பாட, மழை நின்றது. மக்கள் தீட்சிதரின் தெய்வீக சக்தி கண்டு நன்றி தெரிவித்தனர். எல்லாம் அம்பாளின் விளையாட்டு! அவளைச் சரணடைந்தால் வளமோடு வாழலாம், என்று சொல்லி புறப்பட்டார்.