பதிவு செய்த நாள்
26
ஜூன்
2015
05:06
சங்கப்புலவர்களில் குறிப்பிடத்தக்கவர் கபிலர். இவர் மதுரை அருகிலுள்ள திருவாதவூரில், அந்தணர் குலத்தில் பிறந்தார். மாணிக்கவாசகப் பெருமானும் இதே ஊரில் அவதரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பாடல்கள் மிக அருமையானவை என்பதால், நல் இசை வாய்மொழிக் கபிலன் என தமிழ்ச்சங்கத்தின் தலைமைப் புலவரான நக்கீரரே இவரைப் பாராட்டியுள்ளார். இவர் பாரிவள்ளலின் அவைப்புலவராகவும், நண்பராகவும் இருந்தார். பாரிமன்னன் இறந்ததும், அவனது மகள்களுக்கு (பாரி மகளிர்) திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தார். பதிற்றுப்பத்து என்னும் நூல் தொகுப்பில், ஏழாம் தொகுப்பை இயற்றியவர் இவரே. இதற்காக, சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனிடம் லட்சம் பொற்காசுகளையும், கண்ணுக்கெட்டிய துõரம் வரையான நிலப்பரப்பையும் பரிசாகப் பெற்றவர். ஆரியமன்னன் பிரகதத்தனுக்கு தமிழின் பெருமையை எடுத்துரைக்க குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலை எழுதியவர் இவர். இவர் மொத்தம் 278 பாடல்கள் எழுதியுள்ளார். இதில் ஐங்குறுநூறு என்னும் என்னும் நூலில் 100 பாடல்களும், இன்னாநாற்பதில் 41 பாட்லகளும் உள்ளன. நற்றிணையில் 20, குறுந்தொகையில் 29, புறநானுõறில் 30, அகநானுõறில் 17, கலித்தொகையில் 29, பதிற்றுப்பத்தில் 10, திருவள்ளுவமாலை, குறிஞ்சிப்பாட்டு ஆகியவற்றில் ஒரு பாடலும் எழுதியுள்ளார். மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன் இவரால் பாடப்பட்ட மன்னன் ஆவான்.