திருச்செந்தூர் முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2015 04:06
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு வருஷாபிஷேகம் நடந்தது. முருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுக்கு இரு முறை வருஷாபிஷேகம் நடக்கும்.
மூலவர் பிரதிஷ்டை செய்யப்பட்ட தை மாதம் உத்திர நட்சத்திரத்திலும், கோயில் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட அனுசம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் நடக்கும். கும்பாபிஷேக தினத்தில் வருஷாபிஷேகம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்ரூபம், மற்ற கால வேளை பூஜைகள் நடந்தது. காலை 7 மணிக்கு தங்க கொடிமரத்தின் அருகில் புனித நீர் சேகரிக்கப்பட்ட கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சண்முகர் விமானத்திற்கு சிவாச்சாரியார்களும், வெங்கடாஜலபதி விமானத்திற்கு பட்டாச்சாரியார்களும் புனித நீர் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் செய்தனர். திரளான பக்தர்கள் கண்டு களித்தனர்.