நகரி: புத்துார் சதாசிவ ஈஸ்வரன் கோவில் உண்டியலில் பக்தர்கள், கடந்த ஒன்றரை மாதத்தில், 3.29 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சித்துார் மாவட்டம், புத்துார் டவுனில் அமைந்துள்ளது சதாசிவ ஈஸ்வரன் கோவில். இக்கோவிலுக்கு தினசரி நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து, அங்குள்ள உண்டியலில் தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். கடந்த ஒன்றரை மாதத்தில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, நேற்று முன்தினம் கோவில் அதிகாரி சுப்ரமணியம் முன்னிலையில், உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், 3 லட்சத்து 29 ஆயிரத்து 911 ரூபாய் இருந்தது.