பதிவு செய்த நாள்
29
ஜூன்
2015
04:06
கோவை: பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துக்கிடையே ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோமளவல்லித் தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.
கோவை தொண்டாமுத்துார் ரோடு, சுண்டப்பாளையத்தில் ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோமளவல்லித் தாயார் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. கும்பாபிஷேக வைபவம் கடந்த 25 ம் தேதி மாலை 4:00 மணிக்கு அங்குரார்பணத்துடன் துவங்கியது. அன்று இரவு 8:00 மணிக்கு வாஸ்து சாந்தி நடத்தப்பட்டது. கடந்த 26 ம் தேதி காலை 8:00 மணிக்கு வாஸ்துசாந்தி, பஞ்சகவ்யப்ரோஷணம், புண்யாஹவாசனப்ரோஷனம், ரக்ஷாபந்தனமும் நடந்தது. மறுநாள், 27 ம் தேதி காலை 8:00 மணிக்கு சதுர்ஸ்த்தானார்ச்சனம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு சதுர்ஸ்த்தானார்ச்சனம் நடந்தது. மாலை 3:00 மணிக்கு 81 கலச திருமஞ்சனம் நடந்தது. காலை 4:00 மணிக்கு சாந்தி ேஹாமத்துடன் கும்பிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. காலை 6:00 மணிக்கு மேல் புனித நீர் கலசங்களில் எடுத்து வரப்பட்டு அவற்றுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 6:50 மணிக்கு மிதுன லக்னத்தில் ஸ்ரீநிவாச வரதராஜ பெருமாள், கோமளவல்லி தாயார், ஸூதர்ஸன ஆழ்வார் ஆச்சாரியாள் சன்னதிகள், நுாதன பரமபதவாசலுக்கு மஹாகும்பாபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் இசைக்க, பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா முழக்கத்துக்கு இடையே கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானமும் வழங்கப்பட்டது.