ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2015 11:06
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர்திருவிழா இன்று(30ம்தேதி) நடக்கிறது. ரிஷிவந்தியத்தில் 1,500 ஆண்டுகள் பழமைய õன அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் மீது தேனபிஷேகம் செய்யும் போது ஒளிவடிவில் சிவசக்தியை தரிசி க்கமுடியும் என்பது சிறப்பம்சம். இக்கோவில் பிரமோற்சவம் கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் இரவு சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த் திகள் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் 7ம் நாள் விழாவை முன்னிட்டு அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கும், திருமுத்தாம் பிகை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. வசந்த மண்டபத்தில் நடந்த இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நேற்று மாலை சுவாமி, மான் வாகனத்தில் எழுந்தருளி சம்ஹார உற்சவம் நடந்தது. இன்று 9ம் நாள் விழாவில், திருத்தேரோட்டம் நடக்கிறது. காலை10 மணிக்கு உச்சிகால அபிஷேக ஆராதனையும், பகல் 1 மணிக்கு மண்டகபடி நிகழ்ச்சியும் நடக்கிறது. பிற்பகல் 2.30 மணிக்கு கேட்டை நட்சத்திரத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நடக்கிறது. விழாவிற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் திருக்கோவிலூர், தியாகதுருகத்தில் இருந்து சிறப்பு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.