பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
11:06
திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. திருவாடானையில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த 22 ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் 100க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, 4 கால பூஜைகள் நடந்தன. முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. வானில் கருடன் வட்டமிட ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயார், விநாயகர், முருகன், நடராஜர் மற்றும் ராஜகோபுர கும்பங்களுக்கு புனிதநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. வாண வேடிக்கையுடன் நடந்த இவ்விழாவில்,பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் சார்பில் அன்னதானம் மற்றும் நீர் மோர் பக்தர்களுக்கு வழங்கப் பட்டது. திவான் மகேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ஆனிமுத்து, காங்., மாவட்ட தலைவர் "குட்லக் ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் முனியம்மாள், வக்கீல் சிவராமன், விவேகானந்தன், செயல் அலுவலர் சந்திரசேகர், காங்., மாவட்ட துணை தலைவர் கணேசன், அ.தி.மு.க., மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் கணேசன், ஊராட்சி தலைவர்கள் காளை, அமராவதி, கூட்டுறவு சங்க தலைவர் ஆசை ராமநாதன் மற்றும் 22 கிராமத்தார்கள், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி., சேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.