பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
11:06
கடலூர்: திருவந்திபுரம், தேவநாத சுவாமி கோவில் உண்டியல் காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. கடலூர், திருவந்திபுரத்தில், பிரசித்திப் பெற்ற ÷ தவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உண்டியல், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை திறக்கப்பட்டு, எண்ணப்படுவது வழக்கம். இந் தாண்டில், கடந்த ஜனவரி 27ம் தேதியும், ஏப்ரல் 22ம் தேதியும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. மூன்றாம் முறையாக, இந்துசமய அற நிலையத் துறை உதவி ஆணையர்கள் கடலூர் ஜோதி, விழுப்புரம் பிரகாஷ், ஹரிகரன்(பயிற்சி) முன்னிலையில், உண்டியல் நேற்று திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. இப்பணியில், வங்கிப் பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் ஈடுபட்டனர். உண்டியலில், 19 லட்சத்து 30 ஆயிரத்து 981 ரூபாய் ரொக்கம், 534 கிராம் தங்கம், 620 கிராம் வெள்ளி மற்றும் 42 வெளிநாட்டு டாலர்கள் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் எண்ணும் பணியின்போது, கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், ஆய்வாளர் சொரிமுத்து உடனிருந்தனர்.