உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகள் மடத்தில், 18ம் ஆண்டு குரு பூஜை பெரு விழா நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகள் மடத்தில் உலக அமைதி, நாட்டின் வளர்ச்சி, தனி மனித முன்னேற்றம் வேண்டி, 18ம் ஆண்டு குருபூஜை பெருவிழா நேற்று நடந்தது. அதனையொட்டி காலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விநாயகர் பூஜை, 6:30 மணிக்கு கலச பூஜை, 7:00 மணிக்கு மகா அபிஷேகம், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்தது. காலை 10:30 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 11:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, கலச அபிஷேகத்தினை ஸ்ரீராமகிருஷ்ண ஆசிரம தலைவர் அனந்தானந்தஜி மகாராஜ் முன்னிலையிலும், யாக பூஜைகள் பாதூர் அகஸ்த்தீஸ்வரர் கோவில் தர்மகர்த்தா, அருணாச்சல குருக்கள் தலைமையில் நடந்தது. மாலை 4:00 மணிக்கு ஸ்ரீசங்கரலிங்க சுவாமிகள் வீதியுலா நடந்தது. மாலை 6:00 மணிக்கு 2007 திருவிளக்கு பூஜையும், மாலை 6:30 மணிக்கு சுமங்கலிக்கு மங்கல பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மடத்தின் தலைவர் ராதாகிரு ஷ்ணன் மற்றும் மடத்தின் பூசாரிகள் அனைவரையும் வரவேற்றனர்.