பதிவு செய்த நாள்
30
ஜூன்
2015
12:06
பெரியகுளம்: லட்சுமிபுரம், லட்சுமிநாராயணப்பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர். லட்சுமிபுரம் கம்மவார் சமுதாயத்தினர் கோயிலைநிர்வாகித்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் யாகசாலையில் பூஜைகள் நடந்தது. புனித ஸ்தலங்களிலிருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. சடகோபராமானுஜ ஜீயர் சுவாமி தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீவில்லிபுத்துõர் ஆண்டாள் கோயில் அர்ச்சகர் முத்து பட்டர், அர்ச்சகர் ராமானுஜர் ஆகியோர் லட்சுமி நாராயணப்பெருமாள், கருடன், ஆஞ்சநேயர், கணபதி, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகம், துர்க்கைக்கு கும்பாபிஷேகம் நடத்தினர். லட்சுமிபுரம் ஊராட்சி தலைவர் ஜெயபாலன், வர்த்தகபிரமுகர்கள் திருவேங்கடசாமி, பாலமுருகன், அசோக்குமார், வெங்கிடசாமி, தர்மராஜ், ஆதி, வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், சரவணக்குமார், தியாகராஜன் உட்பட பலர் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.