செஞ்சி: அண்ணமங்கலம் கிராமத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பழமையான ஈஸ்வரன் கோவில் பஞ்சலோக சிலைகளை மீட்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆங்கிலேயர்கள் சென்னையை தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிவதற்கு முன்பு வரை தென் இந்தியாவில் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக செஞ்சி இருந்தது. செஞ்சி ÷ காட்டை ஆங்கிலேயர் வசமான பிறகு இதற்கான முக்கியத்துவத்தை குறைத்து, சென்னையில் இருந்து ஆட்சி புரிந்தனர். இதையே செஞ்சி அழிந்து சென்னை உருவானது என செஞ்சியை பற்றி நன்கு அறிந்த வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள் ஆட்சியின் போது செஞ்சி கோட்டையிலும் அதை சுற்றி உள்ள கிராமங்களிலும் பெரிய அளவிளான கோவில்களை கட்டினர். இந்த கோவில்கள் செல்வ செழி ப்போடு பூஜைகள் நடந்து வந்தன. கற்சிலைகள் மட்டுமின்றி அனைத்து கோவில்களிலும் விலை மதிக்க முடியாத பஞ்சலோக உற்சவர் சிலைகளை கொண்ட கோவில்களாக இந்த கோவில்கள் இருந்தன.
கடந்த 1714ம் ஆண்டில் ராஜா தேசிங்கிற்கும், ஆற்காட்டு நவாப்பிற்கும் பெரும் போர் நடந்தது. இந்த படையெடுப்பின் போது ஆற்காட்டில் இருந்து செஞ்சிக்கு வந்த ஆற்காட்டு நவாப்பின் படைகள் வழி நெடுகிலும் இருந்த கோவில்களை அடித்து உடைத்து செல்வங்களை கொள்ளையடித்தனர். இதில் தேவனுõர் கிராமத்தில் உள்ள கமலேஷ்வரி உடனுறை திருநாதீஸ்வரர் கோவிலை ஆற்காட்டு நவாப்பின் படைகள் தாக்கி அழித்து கொண்டி ருந்த தகவல், அண்ணமங்கலம் கிராம மக்களுக்கு தெரிய வந்தது. அடுத்து அண்ணமங்கலம் மடவிளாகம் ஈஸ்வரன் கோவில் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை உணர்ந்த கோவில் நிர்வாகிகள், கோவிலில் இருந்த விலை உயர்ந்த பஞ்சலோக சிலைகளை கோவில் உள் பகுதியில் பள்ளம் எடுத்து பூமிக்கு அடியில் புதைத்து விட்டு தப்பி விட்டனர். இதன் பிறகு வந்த ஆற்காட்டு நவாப்பின் படைகள் கோவிலில் இருந்த சிற்பங்களையும், கோவிலையும் அடித்து உடைத்து சின்னாபின்னம் செய்தனர். அடுத்து பல ஆண்டுகள் நவாப்பு ஆட்சி நடந்ததால் மீண்டும் சிலைகளை எடுக்க வா ய்ப்பு இல்லாமல் போனது. இதன் பிறகு இந்த ரகசியம் தெரிந்தவர்களும் இறந்து போனார்கள். சம்பவங்கள் நடந்து 194 ஆண்டுகள் முடிந்து, 1908ம் ஆண்டு கோவிலை புதுப்பிக்க கிராம மக்கள் முடிவு செய்தனர். அப்போது ஏகாம்பரம் என்பவரின் தலைமையில் நடந்த மராமத்து பணி களின் போது மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட 8 பஞ்சலோக விக்ரகங்களையும் கண்டெடுத்தனர். இந்த சிலைகளை அப்போதைய ஆங்கிலேய அரசு, கடலுõரில் இருந்த கருவூலத்திற்கு கொண்டு சென்றது. இந்த சிலைகளை 1910ம் ஆண்டு ஆங்கிலேய அரசு பொது ஏலத்தில் விட்டது.
இந்த ஏலத்தில் கிராமத்தினர் பங்கேற்று சிலைகளை ஏலம் எடுத்து, மீண்டும் அண்ணமங்கலம் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். சில ஆண்டுகள் ஈஸ்வரன் கோவிலில் வைத்து விழாக்கள் நடத்தினர். கோவிலில் சிலைகள் பாதுகாப்பு இல்லாத நிலை இருந்ததால் கோவிலுக்கு அருகே இருந்த குப் புசாமி என்பவர் வீட்டிலும், பிறகு முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் பாதுகாப்பாக வைத்தனர். முத்தம்மாள் வீட்டில் மற்றொரு பகுதியில் நகை, பணம் திருடு போனதால் அங்கும் சிலைகளுக்கு பாதுகாப்பு இல்லை என கருதி அங்கிருந்து சமத்தகுப்பத்தை சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரின் வீட்டிற்கு சிலைகளை கொண்டு சென்றனர். கோவில் புணரமைக்கப்பட்டவுடன் மீண்டும் சிலைகளை திரும்ப கொண்டு வரலாம் என்ற நம்பிக்கையி ல், இதுநாள் வரையில் அண்ணமங்கலம் கிராம மக்கள் இருந்தனர். ஆனால் கடந்த 2013ம் ஆண்டு சேலம் அஸ்தம்பட்டி போலீசார் சிலைகளை கடத்தும் கும்பலிடம் இருந்து பழமையான நடராஜர் பஞ்சலோக சிலை ஒன்றை மீட்டனர். இந்த சிலையை செஞ்சி தாலுகா சமத்தகுப்பத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் பரிசாக வழங்கியதாக சிலை குறித்து புகார் செய்த செல்வக்குமார் தெரிவித்துள்ளார். பத்திரிகை வாயிலாக இந்த தகவல்களை அறிந்த அண்ணாமங்கலம் கிராம மக்கள் தங்கள் ஊர் சிலை என்பதை உணர்ந்து, பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து சேலம் மாவட்ட போ லீசார் வசம் உள்ள சிலை, தங்கள் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை திரட்டினர். இந்த ஆதார ங்கள் சேலம் மாவட்ட போலீசாரிடம் உள்ள சிலை அண்ணமங்கலம் ஈஸ்வரன் கோவிலுக்கு சொந்தமானது என்பதை உறுதி செய்கின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் போலீசாரிடம் உள்ள நடராஜர் சிலை மற்றும் திருநாவுக்கரசு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட மற்ற 7 சி லைகளையும் மீட்டு தர வேண்டும் என அண்ணமங்கலம் ஊராட்சி தலைவர் ராஜாராணி ஏழுமலை, மற்றும் கிராம பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கை மனுவை தமிழக முதல்வர், விழுப்புரம் மாவட்ட கலெக்டர், டி.ஐ.ஜி., தமிழக தொல்லியல் துறை இயக்குநர், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டவர்களுக்கு அனுப்பி உள்ளனர்.