இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில், திருப்புகழ் சபை சார்பில் அருணகிரிநாதர் சுவாமி 13ம் ஆண்டு குரு பூஜை துவங்கியது. விநாயகர், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பகல் 12 மணிக்கு திருப்புகழ் பஜனை,அருணகிரிநாதர் சுவாமிக்கு அஷ்டோத்திர அர்ச்சனை நடந்தது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடந்தது. மாலை 6மணிக்கு சிறப்பு சொற்பொழிவு நடந்தது. ஏற்பாடுகளை திருப்புகழ் சபையினர் செய்தனர்.