பதிவு செய்த நாள்
07
ஜூலை
2015
11:07
நுங்கம்பாக்கம்: நுங்கம்பாக்கம், வடக்கு மாட வீதியில் உள்ள, அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில், இன்று முதல் வரும், 19ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இன்று காலை 8:00 மணிக்கு, கிராம தேவதை பூஜை, இரவு 7:00 மணிக்கு, விநாயகர் உற்சவம் மூஷிக வாகன வீதியுலா நடக்கிறது. நாளை காலை 6:30 மணிக்கு, கொடியேற்றம், பஞ்சமூர்த்திகள் உற்சவம், வரும், ௧0ம் தேதி, காலை 6:00 மணிக்கு, அதிகார நந்தி, இரவு 7:00 மணிக்கு, பூத வாகனம், 11ம் தேதி இரவு 7:00 மணிக்கு, நாக வாகனம், 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு, ரிஷப வாகன வீதி உலா நடக்கிறது. வரும், 13ம் தேதி இரவு 7:00 மணிக்கு, யானை வாகனம், 14ம் தேதி காலை 7:00 மணிக்கு மேல் 8:15 மணிக்குள். தேரோட்டம் நடைபெறும்.