மதுரை: குருபெயர்ச்சியை முன்னிட்டு மதுரை தல்லாகுளம் பொதுப்பணித்துறை வளாகம் யோக விநாயகர் கோயிலில் சிறப்பு ஹோமம், யாகசாலை பூஜை நடந்தன.மங்கல குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. சுரேஷ்பட்டர் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை நடத்தினர். பொதுப்பணித்துறை பொறியாளர்கள் பங்கேற்றனர்.* அலங்காநல்லுார் ஐயப்பன் கோயிலில் குரு பகவானுக்கு யாகசாலை வேள்வி பூஜை நடந்தது. அனைத்து ராசிக்காரர்களுக்கும் விசேஷ பூஜைகள் செய்தனர். ஏற்பாடுகளை வட்டார ஐயப்பன், முருக பக்தர்கள் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கினர்.