பதிவு செய்த நாள்
08
ஜூலை
2015
04:07
1. வைகுண்ட வர்த்தித பல: அத பவத் ப்ரஸாதாத்
அம்போஜயோநி: அஸ்ருஜத் கில ஜீவதேஹாந்
ஸ்தா நூநி பூருஹ்மயானி ததா திரச்சாம்
ஜாதீ: மநுஷ்ய நிவஹானபி தேவபேதாந்
பொருள்: வைகுண்ட நாதனே! குருவாயூரப்பனே! உன்னுடைய கடாட்சம் பெற்ற ப்ரும்மா மேலும் பலம் பெற்றான். அதன் பின்னர் மரம், செடி, கொடி, ஆகிய தாவரங்களையும், மிருகம், பறவை போன்றவற்றையும், மனிதர்களையும், தேவர்களையும் படைத்தான்.
2. மித்யா க்ரஹ அஸ்மிமதி ராக விகோப பீதி:
அஜ்ஞான வ்ருத்திம் இதி பஞ்ச விதாம் ஸ ஸ்ருஷ்ட்வா
உத்தாம தாமஸ பதார்த்த விதாந தூன:
தேநே த்வதீய சரண ஸ்மரணம் விசுத்யை
பொருள்: குருவாயூரப்பனே! அடுத்து ஐந்து விதமான அறியாமையை படைத்தான். இவை மித்யாக்ரஹம், அஸ்மிமதி, ராகம், கோபம், பயம் என்பவை ஆகும். (ஆத்மா வேறு, உலகம் வேறு என்று எண்ணுதல்= மித்யாக்ரஹம்; உடலையே தான் என்று கொள்ளுதல் = அஸ்மிமதி: பொருளில் வைக்கப்படும் ஆசை = ராகம்; ஆசை வைத்த பொருளைத் தன்னிடம் இருந்து எடுப்பவன் மீது வரும் வெறுப்பு, கோபம்; தனது பொருள்கள் பறிபோகும் என்று நினைத்தல் = பயம்). இதன் பிறகு இந்த அறியாமைக்கு இயல்பான தமோ குணத்தையும் படைத்தான். இப்படியாக அவன் தாழ்வனவற்றை படைத்தது அவன் அறியாமையே ஆகும். அந்த அறியாமை நீங்க உன்னை சரணம் என்று த்யானித்தான்.
3. தாவத் ஸஸர்ஜ மனஸா ஸநகம் ஸநந்தம்
பூய: ஸநாதன முனிம் ச ஸனத்குமாரம்
தே ஸ்ருஷ்டி கர்மணிது தேந நியுஜ்மானா;
த்வத் பாத பக்தி ரஸிகா ஜக்ருஹுர் ந வாணீம்
பொருள்: குருவாயூரப்பனே! அதன் பிறகு ப்ரும்மா தனது மனதினால் ஸநகன், ஸநந்தன், ஸனாதனன், ஸனத்குமாரன் ஆகியோரைப் படைத்தான். அவர்கள் நால்வரையும் படைக்கும் தொழிலில் ஈடுபடுமாறு ப்ரும்மா கூறினான். ஆனால் உனது பாதங்களில் பக்தியுடன் மூழ்கிய அவர்கள் ப்ரும்மாவின் சொல்லை ஏற்கவில்லை.
4. தாவத் ப்ரகோபம் உதிதம் ப்ரதிருந்தத: அஸ்ய
ப்ரூமத்யத: அஜநி ம்ருட: பவதேக தேச:
நாமாநி மேகுரு பதாநி ச ஹா விரிஞ்சேத்
ஆதௌ ருரோத கில தேந ஸ ருத்ர நாமா
பொருள்: குருவாயூரப்பனே! இப்படியாகத் தனது சொல்லை மறுத்த ஸனகர்கள் போன்றோர் மீது உண்டான கோபத்தை அடக்கப் ப்ரும்மா முயற்சித்த போது, அவன் புருவங்களுக்கு நடுவில் இருந்து உன்னுடைய அம்சமாக ம்ருடன் (சங்கரன்) தோன்றினான். அவன் ப்ரும்மாவிடம், ப்ரும்மாவே! எனக்கு பெயரையும் இடத்தையும் அளிப்பாய் என்று அழத் தொடங்கினான். இதனால் அவன் ருத்ரன் என்ற பெயர் பெற்றான் அல்லவா?
3. ஏகாதசாஹ் வயதயா ச விபிந்த ரூபம்
ருத்ரம் விதாய தயிதா வநிதாச்ச தத்வா
தாவந்தி அதத்த ச பதாநி பவத்ப்ரணுந்த:
ப்ராஹ ப்ரஜா விரசனாய ச ஸாதரம் தம்
பொருள்: உன்னால் படைப்பதற்காகத் தூண்டப்பட்ட ப்ரும்மா, ருத்ரனை பதினொரு உருவங்கள் எடுக்கச் சொன்னான். ஒவ்வோர் உருவத்திற்கும் அன்பான மனைவியை (பதினொரு மனைவிகள்) அளித்தான். அவர்களுக்குத் தனித்தனியான இடமும் அளித்தான். பின்னர் ப்ரஜைகளை உருவாக்கும்படி கூறினான்.
6 ருத்ரா பிஸ்ருஷ்ட பயதாக்ருதி ருத்ர ஸங்க
ஸம்பூர்யமாண புவனத்ரய பீதி சேதா:
மா மா ப்ரஜா ஸ்ருஜ தபச்சர மங்கலாய இதி
ஆசஷ்ட தம் கமலபூ: பவதீரி தாத்மா
பொருள்: குருவாயூரப்பனே! ருத்ரனால் உண்டாக்கப்பட்ட பயங்கரமான தோற்றம் உடைய ருத்ரர்களால் இந்த மூன்று உலகங்களும் நிறைவதைக் கண்ட ப்ரும்மா பயந்தான். உன்னால் தூண்டப்பட்ட ப்ரும்மா ருத்ரர்களை நோக்கி, நீங்கள் இனி படைக்க வேண்டாம், உலக நன்மைக்காகத் தவம் இயற்றுங்கள் என்றான்.
7. தஸ்ய அத ஸர்க ரஸிகஸ்ய மரீசி: அத்ரி:
தத்ர அங்கிரா: க்ரதுமுனி: புலஹ: புலஸ்த்ய:
அங்காதஜாயத ப்ருகுச்ச வஸிஷ்ட தக்ஷௌ
ஸ்ரீநாரதச் ச பகவான் பவதங்க்ரி தாஸ:
பொருள்: குருவாயூரப்பனே! மீண்டும் படைத்தல் செயலில்தானே ஆர்வம் கொண்டான் (ப்ரும்மா). அப்போது அவன் உடலில் இருந்து ஒன்பது முனிவர்கள் தோன்றினர். அவர்கள் - மரீசி, அத்ரி, அங்கிரஸ், க்ரது, புலஹர், புலஸ்தியர், ப்ருகு, வஸிஷ்டர், தக்ஷர் ஆகியோர் ஆவர். மேலும், பகவானே! உன் மீதும் உனது பாதங்களின் மீதும் அன்பு பூண்ட நாரதர் தோன்றினார்.
8. தர்மாதிகான் அபிஸ்ருஜந் அத கர்தமம் ச
வாணீம் விதாய விதி: அங்கஜ ஸங்குல: அபூத்
த்வத் போதிதை: ஸநக தக்ஷமுகை: தநூஜை:
உத்போதித: ச விரராம தம: விமுஞ்சன்
பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் ப்ரும்மா தர்மத்தையும் கர்த்தமரையும் படைத்தான். தொடர்ந்து சரஸ்வதியைப் படைத்து அவள் மீது காம வசப்பட்டான். அந்த நேரத்தில் ப்ரும்மாவின் புத்திரர்களான ஸநகன், தக்ஷன் போன்றோர் உன்னால் தூண்டப்பட்டு, ப்ரும்மாவுக்கு அறிவுரை செய்தனர். இதனால் அஞ்ஞானத்தில் இருந்து ப்ரும்மா மீண்டான்.
9. வேதான் புராண நிவாஹாநபி ஸர்வ வித்யா:
குர்வந் நிஜாநந கணாச் சதுரானை: அஸௌ
புத்ரேஷு தேஷு விநிதாய ஸ ஸர்க வ்ருத்திம்
அப்ராப்நுவம் ஸ்தவ பாதாம் புஜம் ஆச்ரித: அபூத்
பொருள்: குருவாயூரப்பனே! நான்கு முகங்கள் கொண்ட ப்ரும்மா தன்னுடைய முகங்களின் இருந்து வேதங்கள், புராணங்கள் மற்றும் அனைத்து வித்யைகளையும் படைத்தான். (இந்த வித்யைகள் சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்பன). இவற்றை தனது புத்திரர்களுக்கு உபதேசம் செய்தான். இத்தனைக்குப் பிறகும் ஸ்ருஷ்டி, வளர்ச்சி அடையாதது கண்டு உன்னுடைய திருவடிகளை த்யானித்தான்.
10. ஜாநந் உபாயம் அத தேஹம் அஜ: விபஜ்ய
ஸ்திரீ பும்ஸபாவம் அபஜந் மனுதத்வ தூப்யாம்
தாப்யாம் ச மானுஷகுலாநி விவர் தயம் ஸ்த்வம்
கோவிந்த மாருதபுராதிப நிருந்தி ரோகாந்
பொருள்: குருவாயூரின் அதிபதியே! கோவிந்தனே! அப்போது ப்ரும்மாவுக்கு ஸ்ருஷ்டிக்கான உபாயம் ஒன்று உதித்தது. தனது உடலை இரண்டாகப் பிரித்து மனு என்று ஆணாகவும் ஸதரூபை என்ற பெண்ணாகவும் தோன்றினான். அவர்கள் மூலம் மனித இனத்தைப் பெருக்கினான். இப்படியாக மனித குலத்தைப் படைப்பவனே! நீ பிணிகள் அனைத்தையும் நீக்க வேண்டும்.