Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » அஜாமிளன் சரிதம்!
அஜாமிளன் சரிதம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
05:07

1. அஜாமினோ நாம மஹீஸுர: புரா
சரன் விபோ தர்மபதான் க்ருஹாச்ரமீ
குரோ கிரா கானனம் ஏத்ய த்ருஷ்ட்வான்
ஸுத்ருஷ்டசீலாம் குலாடம் மதாகுலம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முன்பு ஒரு காலகட்டத்தில் அஜாமிளன் என்ற ப்ராமணன் க்ருஹஸ்தனாக இல்லற தர்மத்தைச் செவ்வனே கடைபிடித்து வாழ்ந்து வந்தான். மிகவும் தர்மவானாக இருந்தான். ஒரு நாள் தந்தையின் சொல்லிற்கு இணங்க காட்டிற்குச் சென்றான். அங்கு வெட்கமே இல்லாதவளும், பிறந்த குலத்தால் அறிவில்லாதவளும் ஆகிய ஓர் விபசாரியைக் கண்டான்.

2. ஸ்வத: ப்ரசாந்தோபி ததாஹ்ருதா சய;
ஸ்வதர்மம் உத்ஸ்ருஜ்ய தயா ஸமாரமன்
அதர்மகாரீ தசமீ பவன்புன;
ததௌ பவந்நாமயுதே ஸுதே ரதிம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இயல்பாகவே தனது புலன்களை அடக்கத் தெரிந்தவனாக இருந்தாலும், அந்தப் பெண்ணால் தனது மனம் கவரப் பட்டான். இதனால் தன்னுடைய இல்லற தர்மங்களை விட்டு அவளுடன் சிற்றின்பம் அனுபவிக்கத் தொடங்கினான். தனது பத்தாவது தசையை அடைந்த பின்னரும் தீய செயல்களையே செய்து வந்தான். இருந்தாலும் உன் பெயர் கொண்ட நாராயணன் என்னும் மகன் மீது மிகவும் ஆசையாக இருந்தான்.

3. ஸ ம்ருத்யுகாலே யமராஜ கிங்கரான்
பயங்கரான் த்ரீன் அபிலக்ஷயன் பியா
புரா மனாக் த்வத் ஸ்ம்ருதிவாஸனா பலாத்
ஜுவாஹா நாராயண நாமகம் ஸுதம்

பொருள்: குருவாயூரப்பனே! வயதான நிலையில் இறக்கின்ற நேரத்தில் அஜாமிளன் கிடந்தான். அப்போது செய்த தீயசெயல்களின் காரணத்தால் அவன் உயிரை எடுக்க வந்த மூன்று யமதூதர்களைக் கண்டு அஞ்சினான். அப்போது தனது மகளான நாராயணனை, நாராயணா என்று அழைத்தான். இப்படி அந்த மகனுக்கு பெயர் வைத்ததும், இப்போது இந்த நேரத்தில் அவனை அழைத்ததும் இளவயதில் உன்னைக் குறித்து சிறிது அறிந்ததால் அல்லவா?

4. துராசயஸ்யாபி ததா த்வ நிர்கத
த்வதீய நாமாக்ஷர மாத்ர வைபவாத்
புர: அபிபேது: பவதீய பார்ஷதா:
சதுர்புஜா: பீதபடா மனோஹரா:

பொருள்: குருவாயூரப்பனே! அஜாமிளன் தீய எண்ணங்கள் உடைய மனது படைத்தவன். இருப்பினும் இப்போது அவன் வாயில் இருந்து வெளிவந்த உன்னுடைய நாமமான நாராயணா என்ற அக்ஷரங்கள் காரணமாக உனது தூதர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பட்டு ஆடை அணிந்தும் காண்பதற்கு இனியவர்களாகவும், நான்கு கரங்களுடனும் இருந்தனர்.

5. அமும் ச ஸம்பாச்ய விகர்ஷதோ படான்
விமுஞ்சதே இதி ஆருருது: பலாத் அமீ
நிவாரிதா: தே ச பவஜ்ஜனை: ததா
ததீயபாபம் நிகிலம் ந்யவேதயன்

பொருள்: குருவாயூரப்பனே! அஜாமிளனை யமதூதர்கள் தங்கள் பாசக்கயிற்றால் கட்டி முரட்டுத் தனமாக இழுப்பதை உனது தூதர்கள் கண்டனர். அவர்கள் யமதூதர்களிடம், அவனை விட்டு வாருங்கள் என்றனர். யமதூதர்கள் மறுக்கவே, அவர்களை உனது தூதர்கள் பலாத்காரமாக தடுத்தனர். அப்போது யமனின் தூதர்கள் அஜாமிளன் செய்த பாவங்களை உனது தூதர்களிடம் வரிசையாகக் கூறினர்.

6. பவந்து பாபானி கதம் து நிஷ்க்ருதே
க்ருதேபி போ தண்டனம் அஸ்தி பண்டிதா:
ந நிஷ்க்ருதி: கிம் விதிதா பவாத்ருசாம்
இதி ப்ரபோ த்வத் புருஷா பபாஷிரே

பொருள்: ப்ரபுவே! குருவாயூரப்பனே! உன்னுடைய தூதர்கள் யமனின் தூதர்களை நோக்கி, தர்மம் அறிந்தவர்களே (பண்டிதா)! அவன் பாவம் செய்தது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் அந்தப் பாவங்களுக்கான பரிகாரம் செய்த பின்னரும், தண்டனை எப்படி உண்டாகும்? நீங்கள் பாவங்களுக்கும் பரிகாரம் உண்டு என்பதை அறியவில்லையா? என்று கூறினர்.

7. ஸ்ருதி ஸ்ம்ருதிப்யாம் விஹிதா வ்ரதாதய:
புனந்தி பாபம் ந லுனந்தி வாஸனாம்
அனந்த ஸேவா து நிகருந்ததி த்வயீம்
இதி ப்ரபோ த்வத்புருஷா பபாஷிரே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது தூதர்கள், சாஸ்திரங்களில் கூறப்பட்ட விரதங்கள் பாவத்தை மட்டுமே நீக்க வல்லன. ஆனால் அவை எதுவும் பாவத்தைத் தூண்டும் எண்ணங்களை (வாஸனை) நீக்குவதில்லை. பகவானின் நாம சங்கீர்த்தனம் மற்றும் அவன் தரிசனமே பாவம், பாவம் செய்யும் எண்ணம் ஆகிய இரண்டையும் நீக்க வல்லது என்றனர்.

8. அனேன போ ஜன்ம ஸஹஸ்ர கோடிபி:
க்ருதேஷு பாபேஷு அபி நிஷ்க்ருதி: க்ருதா
யத் அக்ரஹுத் நாம பயாகுல ஹரே
இதி ப்ரபோ த்வத்புருஷா பபாஷிரே

பொருள்: குருவாயூரப்பனே! உனது தூதர்கள் மேலும் யமதூதர்களே! இவன் தனது ஆயிரம் கோடி ஜன்மங்களில் செய்த பாவங்கள் கூட இப்போது செய்த பரிகாரத்தால் நீக்கப்பட்டது. என்ன பரிகாரம்? மரண பயத்தில் கலங்கி எப்போது ஹரியின் திருநாமத்தை உச்சரித்தானோ அதுவே பரிகாரம் ஆகும் என்றனர்.

9. ந்ருணாம் அபுத்யாபி முகுந்த கீர்த்தனம்
தஹதி அகௌகான் மஹிமா அஸ்ய தாத்ருச:
யதா அக்னி: ஏதாம்ஸி யதா ஓளஷதம் கதான்
இதி ப்ரபோ த்வத் புருஷா பபாஷிரே

பொருள்: குருவாயூரப்பனே! உனது தூதர்கள், நெருப்பு விறகுகளை எப்படி எரிக்கின்றதோ, மருந்தானது வ்யாதிகளை எப்படி நீக்குகின்றதோ அதுபோல் - மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவங்கள் அனைத்தும் முகுந்தனின் நாமத்தைக் கூறினான். எரிந்து விடும். இந்த நாமத்தின் மஹிமை அது என்றனர்.

10. இதீரிதை: யாம்யபடை: அபாஸ்ருதே
பவத்படானாம் ச கணே திரோஹிதே
பவத் ஸ்ம்ருதிம் கஞ்சன காலமாசரன்
பவத்பதம் ப்ராபி பவத் படை: அஸௌ

பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக உனது தூதர்கள் கூறியதும் யமதூதர்கள் மறைந்தனர். உனது தூதர்களும் மறைந்தனர். அதன் பின்னர் அஜாமிளன் சிறிது காலம் உன்னைத் தனது மனதில் த்யானம் செய்தான். இறுதியில் உனது தூதர் படையால் பரமபதத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான் அல்லவா?

11. ஸ்வகிங்கரா வேதன சங்கித: யம:
த்வதங்க்ரி பக்தேஷு ந கம்யதாம் இதி
ஸ்வகீய ப்ருத்யான் அசிசிக்ஷத் உச்சகை:
ஸதோ வாதாலயநாத பாஹிமாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! தனது தூதர்கள் தன்னிடம் நடந்தவற்றøக் கூறக்கேட்ட யமன் அச்சம் கொண்டான். உனது திருவடிகளைப் பற்றியவரையும் நாம சங்கீர்த்தனம் செய்பவர்களையும் என்றும் அணுகக்கூடாது என்று தனது தூதர்களுக்கு உத்தர விட்டான். இத்தகைய பெருமையுடைய நீ என்னைக் காக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar