Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ப்ரஹ்லாத சரிதம்
ப்ரஹ்லாத சரிதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
05:07

1. ஹிரண்யாக்ஷே போத்ரி ப்ரவரவபுஷா தேவ பவதா
ஹதே சோக க்ரோத க்லபித த்ருதி: ஏதஸ்ய: ஸஹஜ:
ஹிரண்ய ப்ராரம்ப: கசிபு: அமராராதி ஸதஸி
ப்ரதிக்ஞாம் ஆதேனே தவ கில வதார்த்தம் மது ரிபோ

பொருள்: மது என்ற அரக்கனை அழித்தவனே! குருவாயூரப்பனே! நீ பெரிய பன்றியாக அவதாரம் எடுத்தபோது உன்னால் இரண்யாக்ஷன் கொல்லப்பட்டான். அப்போது கவலை, கோபம் ஆகியவற்றை அடைந்து அத்துடன் தைரியத்தையும் இழந்தவனும் ஹிரண்யாக்ஷனின் சகோதரனும். ஹிரண்ய என்ற பதத்தை முதலில் உடையவனும் ஆகிய கசிபு என்பவன். உன்னைக் கொல்வதாக தேவர்களின் பகைவர்களான அசுரர் நிரம்பிய சபையில் சபதம் செய்தான் அல்லவா?

2. விதாதாரம் கோரம் ஸ கலு தபஸித்வா நசிரத:
புர: ஸாக்ஷாத் குர்வன் ஸுரநர ம்ருகாத்யை: அநிதநம்
வரம் லப்த்வா த்ருப்தோ ஜகதிஹ பவந் நாயகம் இதம்
பரிக்ஷுந்தந் இந்த்ராத் அஹரத திவம் த்வாம் அகணயந்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்த இரண்யகசிபு என்பவன் தனது கடுமையான தவத்தால் ப்ரும்மாவைத் தனக்கு முன்பாகத் தோன்றும்படி செய்தான். அவன் ப்ரும்மாவிடம் இருந்த தனக்கு தேவர்கள், மனிதர்கள், மற்றும் விலங்குகளால் மரணம் உண்டாகக்கூடாது என்று வரம் பெற்றான். இதனால் மிகுதியான கர்வம் அடைந்த அவன், உன்னை மதிக்காமல், உன்னை மதிக்கும் இந்த உலகத்தை துன்புறுத்தினான். மேலும் இந்திரனிடம் இருந்து தேவலோகத்தையும் கைப்பற்றினான்.

3. நிஹந்தும் த்வாம் பூயஸ்த்வ பதம் அவாப்தஸ்ய ச ரிபோ:
பஹிர் த்ருஷ்டே அந்தர்ததித ஹ்ருதயே ஸுக்ஷ்ம வபுஷா
நதன் உச்சை: தத்ராபி அகில புவனாந்தேச ம்ருகயந்
பியா யாதம் மத்வா ஸ கலு ஜிதகாசீ நிவவ்ருதே

பொருள்: குருவாயூரப்பனே! உன்னை அழிப்பதற்காகவே உனது இருப்பிடமான வைகுண்டத்திற்கு வந்து உன்னைத் தேடினான். அவன் உன்னை வெளியில் தேடியபோது நீ அவனது மனதினுள் சூட்சும உருவம் எடுத்து மறைந்தாய். வைகுண்டத்தில் மட்டும் அல்லாது அனைத்து உலகங்களிலும் உன்னைத் தேடிய இரண்யகசிபு உரத்த சத்தத்தில் கர்ஜனை செய்து, நீ பயந்து ஓடிவிட்டாய் என்று முடிவு செய்து தனது இடத்திற்கு மகிழ்வுடன் திரும்பினான்.

4. தத: அஸ்ய ப்ரஹ்லாத: ஸமஜனி ஸுதோ கர்பவஸதௌ
முனே: வீணாபாணே: அதிகத பவத் பக்தி மஹிமா
ஸவை ஜாத்யா தைத்ய: சிசுரபி ஸமேத்ய த்வயி ரதிம்
கத: த்வத் பக்தானாம் வரத பரமோதா ஹரணதாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வரங்கள் அளிப்பவனே! இரண்யகசிபுவுக்கு ப்ரஹ்லாதன் என்னும் மகன் தோன்றினான். இவன் தனது தாயின் கர்ப்பத்தில் உள்ளபோதே உன்னுடைய பெருமைகளை உபதேசமாக அறிந்தான். யார் மூலமாக? வீணையை எப்போதும் கைகளில் உடையவரான நாரதர் மூலமாக ஆகும். அந்தச் சிறுவன் அசுரர் பிறப்பு எடுத்திருந்தாலும் உன் மீது மிகுந்த பக்தி உடையவனாக, பக்தர்களுக்கு ஓர் உதாரணமாக இருந்தான்.

5. ஸுராரீணாம் ஹாஸ்யம் தவ சரண தாஸ்யம் நிஜஸுதே
ஸ த்ருஷ்ட்வா துஷ்டாத்மா குருபி: அசிசிக்ஷத் சிரம் அமும்
குரு ப்ரோக்தம் ச அஸௌ இதம் இதம் அபராத்ய த்ருடமிதி
அபாகுர்வான் ஸர்வம் தவ சரண பக்தயைவ வவ்ருதே

பொருள்: குருவாயூரப்பனே! கெட்ட குணம் படைத்த அந்த இரண்யகசிபு, தேவர்களின் விரோதிகளான அசுரர்கள் பரிகாசம் செய்யும் உனது திருவடிகளின் மீது தன் மகன் கொண்ட பக்தியைக் கண்டு கோபம் கொண்டான். ப்ரஹ்லாதனின் மனதை மாற்றும் பாடங்களை கற்றுத்தர ஆசான்களுக்கு உத்தரவிட்டான். அத்தகைய ஆசான்கள் உபதேசித்த பாடங்கள் நிரந்தர பயன் அளிக்காதவை என்று முடிவு செய்த ப்ரஹ்லாதன், உனது திருவடியே சிறந்தது என்று தனது பக்தியை மேம்படுத்தினான்.

6. அதீதேஷுச்ரேஷ்டம் கிம் இதி பரிப்ருஷ்டேத தனயே
பவத் பக்திம் வர்யாம் அபி கதிதி ப்ர்யாகுலத்ருதி:
குருப்யோ ரோஷித்வா ஸஹஜமதிர: அஸ்ய இதி அபிவதன்
வதோ பாயான் அஸ்மின் வ்யதனுத பவத்பாத சரணே

பொருள்: குருவாயூரப்பனே! ஒரு நாள் இரண்யகசிபு, ப்ரஹ்லாதனிடம், நீ கற்றவற்றுள் சிறந்தது எது? என்று வினவினான். அதற்கு ப்ரஹ்லாதன் பகவானிடம் கொண்ட பக்தியே சிறந்து உள்ளது என்றான். இதனால் மனவருத்தம் உண்டான இரண்யன் ஆசான்களிடம் கோபம் கொண்டான். அவர்களிடம் இருந்த ப்ரஹ்லாதனின் இந்த பக்தி கடந்த ஜென்மம் மூலமாக வந்தது என்று உணர்ந்தான். உன்னைச் சரண் பற்றிய ப்ரஹ்லாதனைக் கொல்லவும் திட்டம் செய்தான்.

7. ஸ சூலை: ஆவித்த: ஸபஹுமதித: திக்கஜகணை:
மஹாஸர்பைர் தஷ்ட: அபி அனசன கராஹார விதுத:
கிரீந்த்ராவக்ஷிப்தோம் யஹஹ பரமாத்மந்நயி விபோ
த்வயி ந்யஸ்தாத்மத்வாத் கிமபி ந நிபீடாவபஜத்

பொருள்: குருவாயூரப்பனே! ப்ரமாத்மாவே! (ப்ரஹ்லாதனுக்கு என்ன நடந்தது?) சூலம் என்னும் ஆயுதத்தால் துன்புறத்தப்பட்டான்: யானைகளால் மிதிக்கப்பட்டான்; பெரிய நச்சுப் பாம்புகளால் தீண்டப்பட்டான்; நஞ்சு கலந்த உணவு அளிக்கப்பட்டான்;  உயரமான மலையில் இருந்து கீழே தள்ளப்பட்டான். இத்தனை துன்பங்கள் இழைக்கப்பட்டவனாக இருப்பினும், உனது திருவடியில் மனதைத் திருப்பியதால் அவன் துன்பமே படவில்லை அல்லவா? என்ன ஆச்சர்யம்!

8. தத: சங்காவிஷ்ட: ஸ புன: அதிதுஷ்ட: அஸ்ய ஜநக:
குரூக்த்யா தத்கேஹே கில வருணபாசை: தம் அருணத்
குரோஸ்ச அஸாந்நித்யே ஸ புன: அனுகான் தைத்ய தநயாந்
பவத் பக்தே: தத்வம் பரமம் அபி விஜ்ஞாநம் அசிஷத்

பொருள்: குருவாயூரப்பா! இத்தனை நடந்த பிறகும் ப்ரஹ்லாதன் மாறாமல் இருப்பது கண்டு அவனால் தனக்கு ஏதேனும் நேர்ந்திடும் என்று சந்தேகம் கொண்டான். அதனால் ஆசான்களின் சொல்லைக் கேட்ட அவன், ப்ரஹ்லாதனைத் தனது மாளிகையில் பாசக்கயிற்றால் கட்டிப்போட உத்தரவிட்டான். ஆனால் ஆசான்கள் இல்லாத நேரம் ப்ரஹ்லாதன் தன்னுடன் உள்ள அசுரர்களுக்கு உன்னிடம் உள்ள பக்தியின் தன்மையையும் ப்ரஹ்ம ஞானத்தையும் உபதேசம் செய்தான்.

9. பிதா ச் ருண்வன் பால ப்ரகரம் அகிலம் த்வத் ஸ்துதிபரம்
ருஷாந்த: ப்ராஹைநம் குலஹதக க: தே பலம் இதி
பலம் மே வைகுண்ட: தவச ஜகதாம் சாபிஸ பலம்
ஸ ஏவ த்ரைலோக்யம் ஸகலம் இதி தீர: அயம் அகதீத்

பொருள்: குருவாயூரப்பா! அசுரர் கூட்டத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் (ப்ரஹ்லாதனால்) உன்னை உபதேசிக்கத் தொடங்கினர் என்பதை இரண்யகசிபு கேள்விப்பட்டான். மிகுந்த கோபத்துடன் அவன் ப்ரஹ்லாதனிடம், அசுர குலத்தை அழிப்பவனே! உனக்கு பலமாக உள்ளவன் யார்? என்றான். அதற்குப் ப்ரஹ்லாதன் மிகவும் துணிவுடன், எனக்குப் பலமாக உள்ளவன் வைகுண்டநாதன் ஆகிய நாராயணன், உனக்கு பலமாக உள்ளவன் அவனே, மூன்று உலகிற்கும் அவனே அனைத்தும் என்றான் அல்லவா?

10. அரே க்வ அஸௌ க்வ அஸௌ ஸகல ஜகதாத்மா ஹரிரிதி
ப்ரபிந்தே ஸ்ம ஸ்தம்பம் சலித கரவாள: திதி ஸுத:
அத: பச்சாத் விஷ்ணோ ந ஹி வதிதும் ஈச: அஸ்மி ஸஹஸா
க்ருபாத்மந் விச்வாத்மந் பவநபுரவாஸிந் ம்ருடயமாம்

பொருள்: கருணை பொங்கும் மனம் உள்ளவனே! உலகின் நாயகனே! குருவாயூரில் உள்ளவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மிகுந்த கோபம் கொண்ட இரண்யகசிபு, அடேய் ப்ரஹ்லாதா! அனைத்து உலகிலும் உள்ளவன், அவனே ஆத்மா என்று நீ கூறும் அந்த ஹரி எங்கே? எங்கே அவன்? என்று உரக்கக் கூவினான். கைகளில் உருவிய கத்தியுடன் அங்கு உள்ள தூண் மீது பலமாக அடித்தான். அதன் பிறகு என்ன நடந்தது என்பதைக் கூற எனக்கு சக்தி இல்லை, அச்சமே உள்ளது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar