Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

வந்தான் கருப்பன் விளையாட .. வந்தான் கருப்பன் விளையாட .. கருப்பன் வரவு
முதல் பக்கம் » கருப்பசாமி புகழ் மாலை
பெரிய கருப்பண்ணசாமி அருள்வேட்டல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2015
18:14

சீராரும் செந்தமிழால் தினந்தோறும் மாலைகட்டி
வீராதி வீரா! பெரிய கருப்பண்ணனே!
பாரோர் பணிந்தேத்தும் பதமலரிற் சூட்டுகிறேன்
தீராத நோய்தீரத் திருவருளைத் தாருமய்யா!

மீசை அழகை மேல்வேட்டி ஒப்பனையை
வாசமலர் மார்பழகை வாங்கரிவாள் நேர்த்தியினை
ஓசைத் தமிழாலே உள்ளுருகித் தெண்டனிட்டேன்
வாசலுக்குக் காவலனாய் வந்தருள வேண்டுமய்யா!

பிறந்த குலத்தைப் பேணிவரும் உன்னடியை
மறந்த பிழையை மன்னித்தே உன்மகனைக்
கரந்தழுவ வேண்டுமெனக் கண்ணீரால் கவியெழுதிப்
பறந்துவரும் நாயேனைப் பார்த்தருள வேண்டுமய்யா!

அறியாமற் பிழைசெய்தால் ஆட்டிவைத்துப் பார்க்காதே!
தெரியாமற் பிழைசெய்தால் சிறியவரை வருந்தாதே!
புரியாமற் பிழைசெய்தால் புத்திரரை அலைக்காதே!
பரிமேலே வந்தருளிப் பாதுகாக்க வேண்டுமய்யா!

பிண்டம் அளிப்பவனே! பெரிய கருப்பண்ணனே!
மண்டை பெருத்தவுடன் மறந்தபிழை பெரும்பிழைதான்
சண்டையெனக் கருதாதே! சந்நிதிக்கு வந்தடியேன்
வண்டமிழாற் பாடுகிறேன் வாக்கருள் வேண்டுமய்யா!

வெள்ளைக் குதிரையிலே வெட்டரிவாள் தோளேந்திக்
துள்ளிவந்து துணையிருக்கும் தோள்பெருத்த கருப்பண்ணனே!
வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி வணங்குகிறோம்
பிள்ளைகளைக் காப்பாற்றப் பெரியவனே புறப்படுக!

அந்தி சந்திகளில் அடியவரும் குஞ்சுகளும்
நொந்து வருந்தாமல் நோய்நொடிகள்! காணாமல்
முந்தி வந்து காப்பாற்றும் முத்துக் கருப்பண்ணனே!
செந்தமிழால் வணங்குகிறோம் திருவருளைத் தாருமய்யா.

வட்ட விழியுடையாய் வழிமறிக்கும் பிசாசுகளை
வெட்டிவிடும் வாளுடையாய்! விரைந்துவர வெள்ளைநிற
நெட்டைப் பரியுடையாய் நெடுமிசை அழகுடையாய்!
மட்டவிழும் மார்புடையாய் மனைகாக்க வேண்டுமய்யா!

தப்பேது செய்தாலும் தாய்போல் பொறுத்திடுவாய்
முப்போதும் உன்னடியை முத்தமிழால் வாழ்த்துகிறோம்
அப்பா! கருப்பய்யா! அனைத்துவரும் நாயகமே!
எப்போதும் அருகிருப்பாய்; எங்கள்குடி காத்தருள்வாய்!

கண்முன்னே தோன்றிக் காப்பாற்றும் கருப்பய்யா!
பண்ணாலே தண்டனிட்டுப் பாதத்தைப் போற்றுகிறோம்.
விண்பொழியும் மழைபோல வெயிலுக்குக் குடைபோலக்
கண்ணாலே அருள்பொழிந்து காப்பாற்ற வேண்டுமய்யா!

 
மேலும் கருப்பசாமி புகழ் மாலை »
temple
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமே
சங்கரனார் தருமதலாய் ... மேலும்
 
temple
காப்பு

கார்மேவு சோலையெலாம் சூழும் ஊரன்
கழனியெல்லாம் கொஞ்சுதமிழ் பாடும் வீரன்
பார்மேவு ... மேலும்
 
temple
திருக்குளமோ பாதாளம் தொட்டு நிற்கத்
திகழ்கின்ற கோபுரமோ வானம் முட்ட
அருக்கனவன் ஒளிபோலக்கோடிப் ... மேலும்
 
temple
வயலோரம் புரள்கின்ற கயல்கள் எல்லாம்
வடிவுடையாள் கயல் விழியின் வடிவம் காட்ட
அயல்நிற்கும் ... மேலும்
 
temple
விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடும் தமறுகங்கை
தரித்ததோர் கோல கலா பைரவனாகி வேழம் உரித்து
உமை அஞ்சக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.