பதிவு செய்த நாள்
11
ஜூலை
2015
11:07
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவில் உண்டியல், நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டது. இதில், 53 லட்சம் ரூபாய் ரொக்கம் இருந்தது. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள, 26 உண்டியல்கள் நேற்று முன்தினம் கோவில் இணை கமிஷனர் தென்னரசு, துணை கமிஷனர் (நகைகள் சரிபார்ப்பு) வரதராஜன், ஆகியோர் முன்னிலையில் திறந்து எண்ணப்பட்டது. இதில், 53 லட்சத்து, 73 ஆயிரத்து, 147 ரூபாயும், தங்கம், 2 கிலோ, 50 கிராமும், வெள்ளி, 7 கிலோ, 800 கிராமும், வெளிநாட்டு கரன்சிகள், 146 பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.