பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நாளை (15ம் தேதி) அமாவாசையை முன்னிட்டு மூலவர் பெருமாள் தன்வந் திரி பெருமாளாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவை முன்னிட்டு காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூ ஜை, 8:30 மணிக்கு உற்சவர் கண்ணாடி அறை சேவை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடக்கிறது.