மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜூலை 2015 11:07
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஜூலை 18 முதல் 28 வரை நடக்கிறது. இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: ஆடிப்பட்டம் தேடி விதை என்பர். விவசாயிகள் ஆடியில் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் விளை நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர்.மீனாட்சி அம்மனுக்காக ஆடி முளைக்கொட்டு, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு திருவிழா என நான்கு விழாக்கள் உண்டு.ஆடி முளைக்கொட்டு திருவிழாவில் அம்மன் சன்னதி முன் கொடி மரத்தில் ஜூலை 18 ல் கொடியேற்றப்பட்டு 28 வரை பத்து நாட்கள் விழா நடக்கும். மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலையில் ஆடி வீதியில் எழுந்தருள்வார்.ஜூலை 25 இரவு திருவீதியுலா முடிந்த பின் உற்சவ சன்னதியில் அம்மன், சுவாமி மாலை மாற்றும் உற்சவம் நடக்கும். இதை முன்னிட்டு அம்மனுக்கு தங்க ரத உலா, உபயதிருக்கல்யாணம் சேவைகள் பதிவு செய்ய இயலாது என தெரிவித்துள்ளார்.