Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருமலை கோவில் பொக்கிஷத்தில் ஆபரணங்கள் சரிபார்ப்பு திருமலை கோவில் பொக்கிஷத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோவிலில் பளபளக்கும் சுவாமி வாகனங்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2011
10:07

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், சேதமடைந்த சுவாமி சிலைகள் மற்றும் தங்கம், வெள்ளியினாலான வாகனங்கள் பளபளக்க துவங்கி உள்ளன. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் சேதமடைந்த சுவாமி சிலைகள், அரித்துப்போய் காணப்பட்ட தங்கம், வெள்ளியால் செய்யப்பட்ட வாகனங்கள், தேர்கள் போன்றவை சீரமைக்கப்படாமல் இருந்தன. சேவார்த்திகள் சிலர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இவற்றை சீர்செய்வதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, சில நாட்களுக்கு முன்பு, கோவில் சுவாமி சன்னிதியில் இருந்த அறுபத்து மூன்று நாயன்மார்களின் ஐம்பொன் சிலைகளை மெருகூட்டும் பணி நடந்தது. இதன் தொடர்ச்சியாக, கோவிலில் உள்ள சுவாமி, அம்பாள் உலா செல்லும் தங்கம் மற்றும் வெள்ளி வாகனங்கள், கேடயங்களை செப்பனிட்டு பாலிஷ் செய்யும் பணி நேற்று துவங்கியது. இதையொட்டி, நேற்று காலை கோவில் மூன்றாம் பிரகாரத்தில் வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் தங்க கேடயம், வெள்ளி மயில் வாகனம், வெள்ளி யானை, வெள்ளி கேடயம் உள்ளிட்ட வாகனங்களை, இயற்கை மருந்துகளால் பாலிஷ் செய்து மெருகேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். தற்போது வாகனங்கள் புதுப்பொலிவு பெற்று வருகின்றன. கோவில் இணை கமிஷனர் ராஜமாணிக்கம், அறநிலையத்துறை துணை கமிஷனர் மற்றும் நகை சரிபார்ப்பு அதிகாரி அன்புமணி, உதவி கோட்டப் பொறியாளர் மயில்வாகனன் ஆகியோர் முன்னிலையில் நடந்து வரும் இப்பணிகளை தொடர்ந்து தங்கம், வெள்ளி ரதங்கள் மெருகேற்றும் பணியும் சில தினங்களில் துவங்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒரகடம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம் ஹாரம் நாளை நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
குன்றத்துார்: குன்றத்துார் முருகன் கோவிலில், கந்தசஷ்டி விழா விமரிசையாக நடந்தது.குன்றத்துார் முருகன் ... மேலும்
 
temple news
வேலுார்: வேலுார், ஸ்ரீபுரம் பொற்கோவில் வளாகத்தில் குருஸ்தானம் பூஜை மண்டபம் திறப்பு விழா மற்றும் மகா ... மேலும்
 
temple news
திருப்பூர்: அலகுமலை கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் சாமிநாதன், ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘வனத்துக்குள் திருப்பூர் –11’ திட்டத்தில் நேற்று, சிவன்மலை சுப்பிரமணியர் கோவிலுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar