அண்ணன் வாரார் தம்பி வாரார் காயாம்பு நீலமேக வண்ணன் வாரார்
கச்சை மணி சலங்கை கலகல என்றே ஒலிக்க ஈட்டி சமுதாடு பளபள என மின்னவே வாள் எடுத்து கச்சை கட்டி வாகானகுதிரை ஏறி சத்தியமாய் பாராளும் மன்னரெல்லாம் போற்றிநிற்க பாரோங்கும் பதினெட்டாம் படி கருப்பர் கூர் அரிவாள் மீதேறி நின்று விளையாடுவதற்கு தேசத்து ஞாயமெல்லாம் தீர்ப்பதற்கு துடிகருப்பர் வம்பு செய்யும் கள்ளப்பிசாசுகளை ஓட்டிவைக்க வள்ளலைப்போல் தந்து உதவி ஏழைகளை ஆதரிக்க சேமம் குதிரைதனில் வேகவேகமாய் ஓடிவாரார்.