தேனி: ஆடி வெள்ளியை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் கூழ் காய்ச்சி, விளக்கேற்றி பெண்கள் வழிபாடு நடத்தினர்.நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை விழா நடந்தது. தேனி வீரகாளியம்மன் கோயில், பொம்மையகவுண்டன்பட்டி துர்க்கையம்மன் கோயில், பங்களாமேடு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கோயில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பெண்கள் கூழ் காய்ச்சி வழிபாடு நடத்தினர். பெத்தாட்ஷிவிநாயகர் கோயில், அல்லிநகரம் கவுமாரியம்மன் கோயில், கணேசகந்தபெருமாள் கோயில்களில் துர்க்கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு கூழ் வழங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.