பதிவு செய்த நாள்
18
ஜூலை
2015
11:07
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில், ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, நேற்று மதியம் ஒரு மணிக்கு பக்தர்களால் அம்மியில் அரைக்கப் பட்ட பச்ச மஞ்சள் அபிஷேகம் நடந்தது. முன்னதாக பாலாபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 24ம் தேதி இரண்டாம் வெள்ளியன்று மாலை 6 மணிக்கு விளக்கு பூஜை, 31-ம் தேதி 1008 சங்காபிஷேகம், ஆக.7-ம் தேதி விளக்கு பூஜை, 14-ம் தேதி கோமாதா பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாலாஜி தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர். * திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் காளி கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நண்பகல் ஒரு மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்புவனம் இன்ஸ் பெக்டர் முகமது பரக்கத்துல்லா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். * தேவகோட்டை நித்யகல்யாணி புரம் சவுபாக்ய துர்க்கையம்மன் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். கோயில் வளாகத்தில் உள்ளஅட்சய கணபதி, முத்துகுமாரசுவாமி,சிவபெருமான், முனீஸ்வரர் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தேவி கருமாரியம்மன் கோயில், புவனேஸ்வரி அம்மன் கோயில், அருணகிரிப்பட்டினம் மாரியம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. * காளையார்கோவில் கொல்லங் குடி அரியாகுறிச்சி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் தங்க அங்கி அணிந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு தங்க ரதம் இழுக்கப்பட்டது. உதவி ஆணையாளர் ரோசாலி சுவேதா, செயல் அலுவலர் இளையராஜா, பக்தர்கள் பங்கேற்றனர்.