பதிவு செய்த நாள்
18
ஜூலை
2015
12:07
மும்பை :ஆந்திராவின் கோதாவரி நதியில், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற புனித நீராடலின் போது ஏற்பட்ட நெரிசலில், 27 பேர் பலியானதை அடுத்து, மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் நடைபெற்று வரும், கும்பமேளா நிகழ்ச்சியில், வி.ஐ.பி.,கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிசிடம், பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் பேசி, கும்பமேளாவில், வி.ஐ.பி.,கள் கலந்து கொண்டால், நெரிசல் ஏற்பட்டு, சாதாரண மக்கள் பாதிக்கப்படுவர். எனவே, வி.ஐ.பி.,களை அனுமதிக்க வேண்டாம் என, கேட்டுக் கொண்டதை அடுத்து, இந்த முடிவுக்கு, மகாராஷ்டிர அரசு வந்துள்ளது.இந்த தகவலை, மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன், செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்தார்.ஓராண்டு நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சியில், சாதுக்கள், சன்னியாசிகள் புனித நீராடும் நாட்களில், நாசிக் மற்றும் திரியம்பகேஷ்வர் பகுதியில், லட்சக்கணக்கான மக்கள் கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.