108 அம்மன் கோவில்களுக்கு ரூ.5,500 கட்டணத்தில் சுற்றுலா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2015 11:07
சென்னை:ஆடி மாதத்தை ஒட்டி, தமிழகத்தில் பிரசித்தி பெற்ற, 108 அம்மன் கோவில்களுக்கு ஆன்மிக சுற்றுலாவுக்கு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மேற்கொள்ளப்படும், இந்த ஐந்து நாள் சுற்றுலா விவரம்: ஒரு நபருக்கு (இருவர் தங்கும் வசதியுடன்) 5,500 ரூபாய்; சிறாருக்கு (4 - 10 வயது வரை) 4,900 ரூபாய்; தனி அறை வசதியுடன், நபருக்கு (இதில், சொகுசு பேருந்து மற்றும் தங்கும் வசதி மட்டும்) 6,500 ரூபாய் கட்டணம்.மேலும், விவரங்களுக்கு, www.tamilnadutourism.org என்ற இணையதளத்திலும், 044 -- 2533 3444 என்ற தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்.