மேலுார்: மேலுார் அருகே உறங்கான்பட்டி மாயாவூதாரர் கோயிலில் ஆடி மாத பெரும்பூஜை 20 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. கட்டக்காளை மற்றும் தாடிகாப்பான் பிரிவை சேர்ந்த மக்கள் விடிய விடிய சமையல் செய்தனர். சமைத்த சைவ உணவுகளை காலையில் சுவாமிக்கு படையல் செய்தனர். பெரும் பூஜை எனப்படும் அன்னதானம் மாலை வரை நடந்தது. கிராம மக்கள் அனைவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால் பந்தல் போட முடியாமல் அவரவர் வீட்டு முன் ரோட்டில் அமர்ந்து சாப்பிட்டனர்.