Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » ஸ்ரீராமன் அவதாரம்
ஸ்ரீராமன் அவதாரம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீராமன் அவதாரம்

பதிவு செய்த நாள்

20 ஜூலை
2015
17:11

கீர்வாணை: அர்த்யமாந: தசமுகநிதநம்
கோஸலேஷு ருஷ்யச்ருங்கே
புத்ரீயாம் இஷ்டிம் இஷ்ட்வா ததுஷி தசரத
க்ஷ்மாப்ருதே பாயஸாக்ர்யம்
தத்புக்த்யா தத்புரந்த்ரீஷ்வபி திஸ்ருஷு
ஸமம் ஜாதகர்பாஸு ஜாத:
ராமஸ்த்வம் லக்ஷ்மணேன ஸ்வயம் அத
பரதனோபி சத்ருக்ந நாம்னா

பொருள்: குருவாயூரப்பா! உன்னைத் தேவர்கள் இராவணனை அழிக்கும்படி வேண்டி நின்றனர். கோஸல தேசத்தில் ருஷ்யச்ருங்கர் என்ற முனிவர் புத்ர காமேஷ்டி யாகத்தை செய்தார் (தசரதன் வேண்டுகோளுக்கு இணங்க). அங்கு உதித்த உன்னதமான பாயஸத்தை தசரதனிடம் கொடுத்தார். அதனை உட்கொண்ட தசரதனின் மனைவிகள் மூன்று பேரும் கர்ப்பம் உற்றனர். அங்கு இலக்ஷ்மணன், பரதன், சத்ருக்னன் ஆகியோருடன் நீ இராமனாகப் பிறந்தாய் அல்லவா?

2. கோதண்டீ கௌசிகஸ்ய க்ரதுவரம்
அவதும் லக்ஷ்மணேந அநுயாத:
யாத: அபூ: தாத வாசர முநி கதிதமநு
த்வந்த்வ சாந்தாத்வ கேத:
ந்ரூணாம் த்ராணாய பானை: முநிவசன
பலாத் தாடகாம் பாடயித்வா
லப்த்வா அஸ்மாத் அஸ்த்ர ஜாலம் முனிவநம்
அகம: தேவ ஸித்தாச்ரமாக்யம்

பொருள்: குருவாயூரப்பனே! உனது தந்தையான தசரதனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு கோதண்டம் என்ற வில் ஏந்தியபடி, லட்சுமணன் உன்னைத் தொடர்ந்து வர, விச்வாமித்ர முனிவரின் சிறப்பான யாகத்தை (அசுரர்களிடம் இருந்து) காப்பாற்றுவதற்காகச் சென்றாய் அல்லவா? வழியில் நடந்த களைப்பானது, விச்வாமித்திரர் உனக்கு உபதேசித்த பலா மற்றும் அதிபலா ஆகிய மந்த்ரங்கள் மூலம் தீர்ந்தது. மனிதர்களைக் காப்பதற்காக, விச்வாமித்திரரின் கட்டளைக்கு உட்பட்டு தாடகை என்ற அரக்கியை உனது அம்புகளால் வீழ்த்தினாய். இதனால் மகிழ்ந்த அந்த முனிவர் மூலமாக பலவிதமான அஸ்திரங்களை பெற்றாய். பின்னர் முனிவர்களின் இருப்பிடமான ஸித்தாச்ரமம் என்ற இடத்திற்குச் சென்றாய்.

3. மாரீசம் த்ராவயித்வா மகசிரஸிசரை:
அன்ய ரக்ஷாம்ஸி நிக்நந்
கல்யாம் குர்வந் அஹல்யாம் பதி பதிரஜஸா
ப்ராப்ய வைதேஹ கேஹம்
பிந்தான: சாந்த்ரசூடம் தநு: அவனிஸுதாம்
இந்தராமேவ லப்த்வா
ராஜ்யம் ப்ராதிஷ்டதா: த்வம் த்ரிபிரபி ச
ஸமம் ப்ராத்ருவீரை: ஸதாரை:

பொருள்: குருவாயூரப்பா! அங்கு நடந்த யாகத்தின் தொடக்கத்தில் உனது அம்புகளால் மாரீசன் என்ற அரக்கனை விரட்டினாய். அவனுடன் இருந்த அசுரர்களைக் கொன்றாய். நீ நடந்து சென்ற வழியில் அகல்யையை உனது பாத துளிகளால் புனிதம் ஆக்கினாய், அதன் பின்னர் விதேஹ ராஜனான ஜனகன் அரண்மனையை அடைந்தாய். அங்கு இருந்த சிவனுடைய வில்லை முறித்து பூமாதேவியின் மகளான ஸ்ரீமஹாலக்ஷ்மியாகிய சீதையை மனைவியாக அடைந்தாய். பின்னர் நீயும் உனது சகோதரர்களும் மனைவிகளுடன் கோசல நாட்டிற்குப் புறப்பட்டீர்கள் அல்லவா?

4. ஆருந்தானே ருஷா அந்தே ப்ருகு
குலதிலகே ஸங்க்ரமய்யஸ்வதேஜ:
யாதே யாதோஸி அயோத்மாம் ஸுகமிஹ
நிவஸந் காந்த்யா காந்தமூர்த்தே
சத்ருக்ணேன ஏகதா அதோ கதவதி
பரதே மாதுலஸ்ய அதிவாஸம்
தாதாரப்த: அபிஷேக: தவ கில
விஹத: கேகயா தீச புத்ர்யா

பொருள்: க்ருஷணா! குருவாயூரப்பா! நீ செல்லும் போது உன்னைக் கோபத்துடன் ப்ருகு குலத்திற்குத் திலகம் என்று கூறப்படும் பரசுராமர் வழிமறித்தார். அப்போது உன்னுடைய ஒளியால் மயங்கி, தன்னுடைய ஒளியையும் உனக்கு அளித்துச் சென்றார். அதன் பின்னர் நீ அயோத்தி சென்றாய். பார்ப்பவர்கள் மனதைக் கவரும் அழகுடையவனே! அயோத்தியில் நீ சீதையுடன் சுகமாக வாழ்ந்து வந்தாய். ஒருமுறை உனது தம்பி பரதன சத்ருக்னனோடு சேர்ந்து தனது மாமனார் வீட்டிற்குச் சென்றான். அந்த நேரத்தில் உனது தந்தை உனக்கு மகுடம் சூட்டி பட்டாபிஷேகம் செய்ய முயன்ற முயற்சி, கைகேயியால் தடுக்கப்பட்டது அல்லவா?

5. தாதோக்த்யா யாதுகாம: வனம் அநுஜ
வதூஸம்யுத: சாபதார:
பௌரான் ஆருத்ய மார்கே குஹநிலயகத:
த்வம் ஜடாசீரதாரீ
நாவா ஸந்தீர்ய கங்காம் அதிபதவி புன:
த்வம் பாரத்வாஜம் ஆராத்
நத்வா தத்வாக்ய ஹோதோ: அதிஸுகம்
அவஸ: சித்ரகூடே கிரீந்த்ரே

பொருள்; குருவாயூரப்பா! உனது தந்தையின் கட்டளைக்கு ஏற்பவில்லை ஏந்தியபடி, உனது மனைவியுடனும், தம்பியுடனும் காட்டிற்குப் புறப்பட்ட தயாரானாய், உன்னுடன் காட்டிற்கு வர விரும்பிய உனது நாட்டு மக்களைத் தடுத்து நிறுத்தினாய். பின்னர் குகனின் இருப்பிடத்தை அடைந்தாய். அங்கு ஜடை, மரவுரி ஆகியவற்றை அணிந்தாய். பின்னர் படகில் கங்கையைக் கடந்து சென்றாய். வழியில் இருந்த பரத்வாஜ முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று அவரை வணங்கி, அவருடைய சொல்லை மதித்து, சிறப்பான மலையாகிய சித்ரகூட மலையில் வசித்தாய்.

6. ச்ருத்வா புத்ரார்த்திகிந்நம் கலு பரத
முகாத் ஸ்வர்கயாதம் ஸ்வதாதம்
தப்த: தத்வா அம்பு தஸ்மை நிததித
பரதே பாதுகாம மேதினீம் ச
அத்ரிம் நத்வா அத இத்வா வனமதி
விபுலம் தண்டகம் சண்டகாயம்
ஹத்வா தைத்யம் விராதம் ஸுகதிம்
அகலய: சாருபோ: சாரபங்கீம்

பொருள்: குருவாயூரப்பா! உனது தந்தை புத்திர சோகம் தாங்காமல் மரணம் அடைந்தார் என்ற செய்தியை பரதன் மூலமாகக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தாய். தந்தைக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம் செய்தாய். பரதனிடம் உனது பாதுகைகளையும், இராஜ்ஜியத்தையும் அளித்தாய். பின்னர் அத்ரி முனிவரின் ஆசிரமம் சென்று வணங்கினாய். அதன் பிறகு, மிகவும் பெரியதான தண்டகாரண்யம் என்ற காட்டை அடைந்தாய். அங்கு வசித்து வந்த விராதன் என்ற பெயர் வடிவம் கொண்ட அசுரனை அழித்தாய். பின்னர் சரபங்க முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று, அவருக்கு மோட்சம் அளித்தாய்.

7. நத்வா அகஸ்த்யம் ஸமஸ்தாசரநிகர
ஸபத்ராக்ருதிம் தாபஸேப்ய:
ப்ரத்யச்ரௌஷீ: ப்ரியைஷீ ததநு ச முநிநா
வைஷ்ணவே திவ்யசாபே
ப்ரஹ்மாஸ்த்ரே ச அபி தத்தே பதிபித்ரு
ஸுஹ்ருதம் வீக்ஷ்ய பூய: ஜடாயும்
மோதாத் கோதா தடாந்தே பரிரமஸி புரா
பஞ்சவட்யாம் வதூட்யா

பொருள்: குருவாயூரப்பனே! முனிவர்களின் நன்மைகளை முன்னிட்டு அனைத்து அசுரர்களையும் அழிப்பதாக உறுதி பூண்டாய். அகத்திய முனிவரைக் கண்டாய். அவர் மூலமாக விஷ்ணுவின் சிறந்த வில்லும், ப்ரஹ்மாஸ்திரமும் வழங்கப் பெற்றாய். அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில் உனது தந்தையின் நண்பரான ஜடாயுவைப் பார்த்து மகிழ்ந்தாய். பின்னர் கோதாவரி நதியின் கரையில் உள்ள பஞ்சவடி என்ற இடத்தில் உனது மனைவியுடன் இன்பமாக வாழ்ந்தாய்.

8. ப்ராப்தாயா: சூர்ப்பணகயா மதன சலத்ருதே:
அர்த்தனை: நிஸ்ஸஹாத்மா
தாம் ஸௌமித்ரௌ விஸ்ருஜ்ய
ப்ரபலதமருஷா தேந நிர்லூந நாஸாம்
த்ருஷ்ட்வா ஏனாம் ருஷ்ட சித்தம் கரம்
அபிபதிதம் தூஷணம் ச த்ரிமூர்த்தம்
வ்யாஹிம்ஸீ: ஆசரானபி அயுத ஸமதிகாம்
தத்க்ஷணாத் அக்ஷதோஷ்மா

பொருள்: குருவாயூரப்பனே! உன்னிடம் காமம் கொண்டு சூர்ப்பனகை என்ற அரக்கி உனக்கு அருகாமையில் வந்தாள். அவளுடைய வேண்டுகோளை ஏற்காமல் அவளை இலட்சுமணனிடம் அனுப்பினாய். மிகவும் கோபம் கொண்ட இலட்சுமணன் அவள் மூக்கை அறுக்க, அதனால் மிகுந்த சினம் கொண்டாள். அவளது நிலைமையைக் கண்டு பொறுக்காமல் கரன். தூஷணன், த்ரிசிரஸ் போன்றவர்களும் மேலும் பதினாயிரத்திற்கு மேற்பட்ட அசுரர்களும் உன்னை நோக்கி வந்தனர். அவர்களை உனது மங்காத வீரத்தால் அதே நேரத்தில் கொன்றாய்.

9. ஸோதர்யா ப்ரோக்த வார்த்தா விவச
தசமுகா திஷ்ட மாரீசமாயா
ஸாரங்கம் ஸார ஸாக்ஷ்யா ஸ்ப்ருஹிதம்
அநுகத: ப்ராவதீ: பாணாகாதம்
தந்மாயாக்ரந்த நிர்யாபித பவதநுஜாம்
ராவண; தாம் அஹார்ஷீத்
தேன ஆர்த்தோபி த்வம் அந்த: கிமபி
முதம் அதா: தத்வ தோபாய லாபாத்

பொருள்; குருவாயூரப்பனே! தனது சகோதரியான சூர்ப்பனகையின் சொற்களைக் கேட்ட இராவணன் கோபம் கொண்டான். அவனது தூண்டுதலால் மாரீசன் மாயமானாக வந்தான். தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடைய சீதை அதனை விரும்பினாள். நீ அதனை தொடர்ந்து சென்று அம்புகளால் கொன்றாய். அப்போது அந்த மாரீசன் மாயக் குரல் எழுப்பினான். இதனைக் கேட்டு பயந்த சீதை உனது தம்பியான இலட்சுமணனை உன்னிடம் அனுப்பினாள். அப்போது அந்த சீதையை இராவணன் அபகரித்தான். இதனால் நீ வெளியில் துன்பம் கொண்ட போதிலும், மனதில் இராவணனைக் கொல்ல உபாயம் கிடைத்தது என்று மகிழ்ந்தாய் அல்லவா?

10. பூய: தந்வீம் விசின்வந் அஹ்ருத
தசமுக: த்வத் வதூம் மத்வதேனே
இதி உக்த்வா யாதே ஜடாயௌ திவம் அத
ஸுஹ்ருத: ப்ராதனோ: ப்ரேத கார்யம்
க்ருண்ஹாநாம் தம் கபந்தம் ஜகநித சபரீம்
ப்ரேக்ஷ்ய பம்பாதடே த்வம்
ஸம்ப்ராப்த: வாதஸுநும் ப்ருசமுதிதமநா:
பாஹி வாதாலயேச

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது மனைவியைத் தேடிச் செல்லும் வழியில் ஜடாயுவைக் கண்டாய். ஜடாயு உன்னிடம். இராவணன் என்னைத் தாக்கிவிட்டு உனது மனைவியை தூக்கிச் சென்றான் என்று கூறினார். அதன் பின்னர் அவர் இறந்தார். நண்பனான ஜடாயுவிற்கு வேண்டிய ஈமக்காரியங்களை நீ செய்தாய். வழியில் உன்னைப் பிடித்த கபந்தனை அழித்தாய். பம்பையின் நதிக்கரையில் சபரியைக் கண்டாய். அதன் பின்னர் அனுமனைச் சந்தித்தாய்; மிகவும் மகிழ்வு கொண்டாய். இத்தனை செயல்களைப் புரிந்தவனே! என்னைக் காக்க வேண்டும்.

ஸ்ரீராமன் அவதாரம் - 2

1. நீத: ஸுக்ரீவமைத்ரீம் ததநு ஹனுமதா
துந்துபே: காயம் உச்சை:
க்ஷிப்த்வா அங்குஷ்டேந பூய: லுலுவித
யுகபத் பத்ரிணா ஸப்த ஸாலாந்
ஹத்வா ஸுக்ரீவ காதோத்யதம் அதுலபலம்
வாலிநம் வ்யாஜவ்ருத்யா
வர்ஷாவேலாம் அநைஷீ: விரஹதரலித:
த்வம் மதங்காச்ரமாந்தே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் அனுமன் மூலமாக சுக்ரீவனின் நட்பை நீ பெற்றாய். துந்துபி என்ற அசுரனின் உடலை உனது கால்கட்டை விரலால் மட்டுமே உயரமாகத் தூக்கி எறிந்து வெகுதூரம் சென்று விழும்படி செய்தாய். ஒரே அம்பினால் ஏழு மரங்களை வீழ்த்தினாய். மிக அதிகமான வலிமை உடையவனும், சுக்ரீவனைக் கொல்ல எண்ணியவனும் ஆகிய வாலியைத் தந்திரமாகக் கொன்றாய். சீதையைப் பிரிந்த துக்கம் தாள முடியாமல் நீ மதங்க முனிவரின் ஆச்ரமத்தில் மழைக் காலத்தை கழித்தாய் அல்லவா?

2. ஸுக்ரீவேண அநுஜோக்த்யா ஸபயம் அபியதா
வ்யூஹிதாம் வாஹிநீம் தாம்
ருக்ஷாணாம் வீக்ஷ்ய திக்ஷு த்ருதம் அத
தயிதா மார்கணாய அவநம்ராம்
ஸந்தேசம் ச அங்குலீயம் பவந ஸுதகரே
ப்ராதிச: மோதசாலீ
மார்கே மார்கே மமார்கே கபிபிரபி: ததா
த்வத்ப்ரியா ஸப்ரயாஸை:

பொருள்: குருவாயூரப்பனே! அதன் பின்னர் உனது தம்பி இலட்சுமணனின் சொற்களுக்கு இணங்க, அச்சத்துடன் உன்னிடம் சுக்ரீவன் வந்தான். அவனது படைகள் உனது துணைவியான சீதையைத் தேடுவதற்காக அணியாக நின்றன. இதனைக் கண்ட நீ மிகுந்த மகிழ்வு கொண்டாய். அதன் பின்னர், அனுமனின் கைகளில் உனது மோதிரத்தையும் செய்தியையும் அளித்தாய். உடனே, வானர வீரர்கள் அனைத்துத் திசைகளிலும் அனைத்து வழிகளிலும் உனது பிரியமான சீதையைத் தேடினர்.

3. த்வத் வார்த்தா கர்ணநோத்யத்கருதுரு
ஜவஸம்பாதி ஸம்பாதி வாக்ய
ப்ரோத்தீர்ணார்ணோதி: அந்தர் நகரி ஜனகஜாம்
வீக்ஷ்ய தத்வா அங்குலீயம்
ப்ரக்ஷுத்ய உத்யாநம் அக்ஷக்ஷபண சணரண:
ஸோடபந்த: தசாஸ்யம்
த்ருஷ்ட்வா ப்லுஷ்டவா ச லங்காம் ஜடிதி ஸ
ஹனுமான் மௌலிரத்நம் ததௌ தே

பொருள்: குருவாயூரப்பனே! உனது சரிதத்தைக் கேட்டவுடன் ஸம்பாதிக்கு சிறகுகள் முளைத்தன. அவர் சற்றே மேலே பறந்தார். அங்கிருந்து சீதையைக் கண்டார். அவருடைய சொற்களைக் கேட்ட அனுமனும் கடலைத் தாண்டிச் சென்றான். அங்கு இருந்த இலங்கையின் நடுவில் ஜனகனின் மகளான சீதையைக் கண்டான். உனது மோதிரத்தைச் சீதையிடம் அளித்தான். அசோகவனத்தையே அழித்தான். தடுக்க வந்த அட்சய குமாரனைக் கொன்றான். பின்னர் (இந்திரஜித் தொடுத்த) ப்ரம்மாஸ்த்திரத்திற்குக் கட்டுப்பட்டான். இராவணனையும் கண்டான். இலங்கையை எரித்தான். பின்னர் விரைவாக உன்னிடம் வந்த (சீதை அளித்த) சூடாமணியைக் கொடுத்தான் அல்லவா?

4. த்வம் ஸுக்ரிவ அங்கதாதி ப்ரபல
கபிசமூ சக்ர விக்ராந்தபூமீ
சக்ர: அபிச்ரம்ய பாரே ஜலதி
நிசிசரேந்த்ரானுஜா ச்ரீயமாண:
தத்ப்ரோக்தாம் சத்ருவார்த்தாம் ரஹஸி
நிசமயந் ப்ரார்த்தநா பார்த்யரோஷ
ப்ராஸ்தாக்நேயாஸ்த்ர தேஜஸ்த்ரஸத்
உததிகிரா லப்தவாந் மத்ய மார்கம்

பொருள்: குருவாயூரப்பா! சுக்ரீவன், அங்கதன் போன்ற பலம் மிகுந்த வானர வீரர்களுடன் நீ, வானரக் கூட்டம் முழுவதுமாக ஆக்கிரமித்தபடி நின்ற இடத்திற்கு வந்தாய். அந்த சமுத்திரத்தின் கரையில் இராவணனின் தம்பியான விபீஷணன் உன்னிடம் தஞ்சம் புகுந்தான். அவன் உன்னிடம் எதிரிகளைப் பற்றி விரிவாகக் கூறினான். உன்னுடைய தாழ்மையான வேண்டுகோளை கேட்டும் சமுத்திரராஜன் அமைதியுடன் இருக்கவே நீ கோபம் கொண்டு ஆக்னேயாஸ்த்ரத்தை விடத் தயாரானாய். உடனே பயந்து போன சமுத்திரராஜன் உன்னிடம் வந்தான். அவன் கூறியபடி கடலின் நடுவே வழியை அமைத்தாய்.

5. கீசை: ஆசாந்தரோ பாஹ்ருத கிரிநிகரை:
ஸேதும் ஆதாப்ய யாத:
யதூநி ஆமர்த்ய தம்ஷ்டராநக சிகரி சிலா
ஸாலசஸ்த்ரை: ஸ்வஸைன்யை:
வ்யாகுர்வந் ஸாநுஜ: த்வம் ஸரமபுவி பரம்
விக்ரமம் சக்ரஜேத்ரா
வேகாந் நாகாஸ்த்ரபத்த: பதகபதி கருந்
மாருதை: மோசித: அபூ:

பொருள்: குருவாயூரப்பா! அனைத்து வானரங்களும் பல திசைகளில் இருந்தும் மலைகளைக் குவியல்களாகக் கொண்டு வந்தனர். அதனால் அணையைக் கட்டினாய். அதன் மூலம் இலங்கையை அடைந்தாய். அங்கு சென்று, பற்கள், நகங்கள், மலைகள், கற்கள் போன்றவற்றை மட்டுமே ஆயுதங்களாகக் கொண்டிருந்த உனது படைகளின் உதவியால் அசுரர்களை அழித்தாய். உனது தம்பியுடன் இணைந்து சிறந்த முறையில் போர் புரிந்தாய். அப்போது இந்திரஜித் கொடுத்த நாகாஸ்தி தரத்தால் கட்டப்பட்டாய். பின்னர் கருடனின் சிறகின் காற்று உன்மீது படவே மீண்டும் எழுந்தாய்.

6. ஸௌமித்ரி: து அத்ர சக்திப்ரஹ்ருதி
கலதஸு: வாத ஜாநீத சைல
க்ராணாத் ப்ராணாந் உபேத: வ்யக்ருணுத
குஸ்ருதிச்லாகிநம் மேகநாதம்
மாயா க்ஷோபேஷு வைபீஷண வசந
ஹ்ருத ஸ்தம்பந: கும்பகர்ணம்
ஸம்ப்ராப்தம் கம்பிதோர்வீதலம் அகில
சமூ பக்ஷிணம் வ்யக்ஷிணோ: த்வம்

பொருள்: குருவாயூரப்பா! சக்தி ஆயுதம் தாக்கியதால் இலட்சுமணன் மயக்கம் அடைந்து வீழ்ந்தான். உடனே அனுமனால் கொண்டு வரப்பட்ட ஸஞ்ஜீவினீ என்ற மலையில் உள்ள மூலிகையால் மயக்கம் தெளிந்தான். தனது மாய வித்தைகளால் கர்வம் கொண்டிருந்த இந்திரஜித்தை இலட்சுமணன் வீழ்த்தினான். நீ அந்தப் போரில் உண்டான மாயைகள் மூலம் கலக்கம் அடைந்தாய். ஆயினும் விபீஷணனின் வார்த்தைகள் மூலம் உனது மனக்கவலை நீங்கியது. அப்போது இந்தப் பூமியே அதிர்ந்து நடுக்கம் கொள்ளும்படியும், அனைத்துப் படைகளையும் உண்பவனும் ஆகிய கும்பகர்ணன் உன்னை நோக்கி வந்தபோது அவனைக் கொன்றாய்.

7. க்ருஹ்ணன் ஜம்பாரி ஸம்ப்ரேஷித
ரதகவசௌ ராவணேன அபியுத்யந்
ப்ரஹ்மாஸ்த்ரேண அஸ்ய பிந்தந் கலததிம்
அபலாம் அக்னிஸுத்தாம் ப்ரக்ருண்ஹந்
தேவச்ரேணீ வரோஜ் ஜீவித ஸமர ம்ருதை:
அக்ஷதை: ருக்ஷஸங்கை:
லங்காபர்த்ரா ச ஸாகம் நிஜ நகரமகா:
ஸப்ரிய; புஷ்பகேண

பொருள்: குருவாயூரப்பா! இந்திரன் உனக்குத் தேரையும் கவசத்தையும் அளித்தான். இவற்றை ஏற்ற நீ இராவணனுடன் யுத்தம் செய்தாய். அப்போது ப்ரம்மாஸ்திரம் மூலம் அவனது பத்துத் தலைகளையும் வெட்டினாய். அக்னிப் ப்ரவேசம் செய்த பரிசுத்தமான உனது மனைவியான சீதையை ஏற்றாய். தேவர்களின் உதவியால், உயிர் நீத்த அனைத்து வானரக் கூட்டமும் உயிர் பெற்றது. அவர்களுடனும், இலங்கையின் அதிபதியான விபீஷணனோடும், இலட்சுமணனோடும் புஷ்பக விமானம் ஏறிய நீ உனது நகரமான அயோத்திக்குச் சென்றாய்.

8. ப்ரீதோ திவ்ய அபிஷேகை: அயுதஸமதிகாந்
வத்ஸராந் பர்யரம்ஸீ:
மைதில்யாம் பாபவாசா சிவசிவ கில தாம்
கர்ப்பிணீம் அப்யஹாஸீ:
சத்ருக்னேன அர்தயித்வா லவண நிசிசரம்
ப்ரார்த்ய ஸுத்ரபாசம்
தாவத் வால்மீகி கேஹே க்ருவஸதி:
உபாஸுத ஸீதா ஸுதௌ தே

பொருள்: குருவாயூரப்பனே! உன்னுடைய பட்டாபிஷேகம் மிகவும் திவ்யமாக நடந்தது. அதனால் மகிழ்வுற்ற நீ பல வருடம் சுகமாக வாழ்ந்தாய். சீதையைக் குறித்து படிப்பே இல்லாத ஒருவன் கூறிய பாவமான பேச்சைக் கேட்டு, கர்ப்பமாக இருந்த அவளைத் துறந்தாய். இது என்ன கஷ்டம் கஷ்டம் (சிவ சிவ) சத்ருக்னன், லவணன் என்ற அசுரனைக் கொன்றான். சம்பூகன் என்பவன் தகாத காரியம் செய்ய முயன்றபோது நீ அவனைக் கொன்றாய். வால்மீகி முனிவரின் ஆசிரமத்தில் வசித்து வந்த சீதை இரண்டு மகன்களைப் பெற்றாள் அல்லவா?

9. வால்மீகே: த்வத்ஸுதோத்காபித மதுரக்ருதே:
ஆஜ்ஞயா யஜ்ஞவாடே
ஸீதாம் த்வயி ஆப்துகாமே க்ஷிதிம் அவிசத்
அஸௌ த்வம் ச காலார்த்தித: அபூ:
ஹேதா: ஸௌமித்ரிகாதீ ஸ்வயம் அத
ஸரயூ மக்ந நிச்சேஷ ப்ருத்யை:
ஸாகம் நாகம் ப்ரயாதோ நிஜபதமகமோ
தேவ வைகுண்ட மாத்யம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! யாகசாலைக்கு வந்த உனது இரண்டு மகன்களும், வால்மீகி முனிவரின் கட்டளையை ஏற்று இராமாயணத்தை மிகவும் இனிமையாகப் பாடினார்கள். நீ சீதையை ஏற்கச் சம்மதித்தாய். ஆனால் அப்போது சீதை இந்தப் பூமியின் உள்ளே சென்று மறைந்தாள். நீயும் யமனால் வைகுண்டம் செல்லும்படி வேண்டப்பட்டாய். ஒரு காரணத்திற்காக நீயே உனது தம்பியான இலட்சுமணனைத் துறந்து அவனுடைய இறப்பிற்குக் காரணமானாய். பின்னர் உனது சுற்றத்தாருடன் (அவர்கள் சரயு நதியில் மூழ்கினர்) உனது இடமான வைகுண்டம் சென்று அடைந்தாய்.

10. ஸ: அயம் மர்த்யாவதார; தவ கலு நியதம்
மர்த்ய சிக்ஷார்த்த மேவம்
விச்லேக்ஷார்த்தி: நிராகஸ்த்யஜநமபி பவேத்
காமதர்மாதி ஸக்த்யா
நோசேத் ஸ்வாத்மானுபூதே: க்வநு தவ மனஸ:
விக்ரியா சக்ரபாணே
ஸ த்வம் ஸத்வைகமூர்த்தே பவன புரபதே
வ்யாதுனு வ்யாதிதாபாந்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உனது இந்த மனித அவதாரம் பல படிப்பினைகளைக் கூறுவதற்கே ஆகும். அவையாவன - அன்பானவர்களைப் பிரிந்தால் துக்கம் உண்டாகும்: காமமும் தர்மமும் பற்று அதிகரித்தால் த்யாகத்தில் கொண்டு சேர்த்து விடும். சக்கரத்தைக் கைகளில் கொண்டவனே! பரிசுத்த ரூபனே! மாறுதல்கள் அற்றவனே! எனது வ்யாதிகளை நீ தீர்க்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar