பெரம்பலூர்: பெரம்பலூர் செல்வ விநாயகர் கோவிலில் வரும் 15ம் தேதி 13ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடக்கிறது. பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள செல்வ விநாயர் கோவில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கடந்த 1998ம் ஆண்டு ஜூலை 15ல் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதைமுன்னிட்டு ஆண்டு தோறும் வருடாபிஷேக விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 13ம் ஆண்டு வருடாபிஷேக விழா வரும் 15ம் தேதி மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் நடக்கிறது. திருச்செங்கோடு சுவாமிநாத குருக்கள் அபிஷேகத்தை நடத்துகிறார். விழா ஏற்பாடுகளை நிர்வாக குழுவினர் மற்றும் புரவலர்கள் செய்து வருகின்றனர்.