வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை நகர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில், விநாயகர், விசாலாட்சி, தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் விக்ரகங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆடி மாதத்தை முன்னிட்டு, நேற்று துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரப் பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.