பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
11:07
பெங்களூரு: தர்மராஜா கோவில் வீதி, தேவி படவேட்டம்மன் கோவிலில், நாளை, அம்மன் உற்சவ கொடியேற்றம் நடக்கிறது.இக்கோவிலில், கடந்த, 17ம் தேதி, ஆடி மகா உற்சவம் துவங்கிய நிலையில், நாளை காலை, 8:00 மணிக்கு, கலச ஸ்தாபனம், 9:00 மணிக்கு அம்மன் உற்சவ கொடியேற்றம், இரவு, 7:00 மணிக்கு கங்கண பூஜையுடன் காப்பு அணிவிக்கப்படுகிறது. 8:00 மணிக்கு மகா மங்களார்த்தி காண்பிக்கப்படுகிறது.வரும், 31ம் தேதி மற்றும், ஆக., 7ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம், ஹோமம், சிறப்பு அலங்காரம் செய்யப்படுகின்றன. ஆக., 14ம் தேதி அமாவாசையன்று, இரவு, 7:00 மணிக்கு, தேவி படவேட்டம்மன் பச்சை கரக ஊர்வலமும், ஆக., 16ம் தேதி, தேவி படவேட்டம்மனின் ஆடி மகா உற்சவம் நிறைவு பெறுகிறது. தேவி படவேட்டம்மன் கோவிலில், விரைவில், நவகிரக பிரதிஸ்தாபனம் நடக்கவுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 99868 52239 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.