Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரதிபுரம் கோவிலில் ஊஞ்சல் ஊற்சவம் காரைக்கால் புனிதவதியார்-பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம் காரைக்கால் புனிதவதியார்-பரமதத்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2011
11:07

சபரிமலை : மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை மறுநாள் (16ம்தேதி) மாலை திறக்கப்படும். பூஜைகள் முடிந்து, வரும் 21ம்தேதி நடை அடைக்கப்படும். கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் நடை ஒவ்வொரு மாதமும், மாத பூஜைகள், சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் ஆகியவற்றுக்காக திறக்கப்படுவது வழக்கம். அதேபோல், ஆடி மாத பூஜைகளுக்காக, நாளை மறுநாள் (16ம்தேதி) நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு, தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில், மேல்சாந்தி சசி நம்பூதிரி நடையை திறப்பார். அன்றைய தினம், வேறு பூஜைகள் இருக்காது. மறுநாள்(17ம்தேதி) அதிகாலை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகள் துவங்கும். ஆடி முதல் தேதி (17ம்தேதி) முதல் ஐந்து நாட்கள், தொடர்ந்து மாத பூஜைகள் தவிர, சிறப்பு பூஜைகளான படி, உதயாஸ்தமன பூஜைகளும், நெய் அபிஷேகமும் நடைபெறும். வழக்கமான பூஜைகள் முடிந்து, வரும் 21ம் தேதி இரவு 10 மணிக்கு, ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும்.

நிறப்புத்தரி உற்சவம்: ஒவ்வொரு ஆண்டும், விவசாயிகள் தங்களது நிலங்களில் விளைந்த, புதிய நெற்கதிர்களை அய்யப்பனுக்கு கொண்டு வந்து படைப்பது வழக்கம். இதற்கு, நிறப்புத்தரி உற்சவம் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், இவ்வாண்டுக்கான உற்சவம், வரும் ஆக., 5ம்தேதி (ஆடி மாதம் 20ம்தேதி) அதிகாலை 5.30 மணி முதல் 6.45 மணிக்குள் நடைபெற உள்ளது. உற்சவத்திற்காக, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, ஆக., 4ம்தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். உற்சவம், சிறப்பு பூஜைகள் முடிந்து, அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

அய்யப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களின் கவனத்திற்கு...

நாட்டில் அய்யப்பனுக்கென, பல கோவில்கள் இருந்தாலும், கேரள மாநிலம், பந்தனம் திட்டா மாவட்டத்திலுள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் மட்டுமே, மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டு தோறும் இந்த அய்யப்பனை தரிசிக்க, கோடிக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள். இதில் வெளிநாட்டு பக்தர்களும் உண்டு. இங்குள்ள அய்யப்பன், பிரம்மச்சரிய கோலத்தில் குத்துக்காலிட்டு, யோகநிலையில், சின்முத்திரையுடன் அருள்பாலித்து வருகிறார். இவரை, தரிசிக்க செல்லும் பெண் பக்தர்கள், 10 வயதிற்குள்ளாகவும், 50 வயதிற்கு மேலாகவும் இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே, 11 வயது முதல் 49 வயது வரை உள்ள பெண் பக்தர்கள், பம்பைக்கு மேல் செல்ல அனுமதிக்கப்படுவதே கிடையாது. அப்படி இவர்கள் வந்தாலும், பம்பையில் உள்ள கணபதி கோவிலிலேயே நிறுத்தப்பட்டு விடுகிறார்கள். அதே சமயம், 50 வயதுக்கு மேற்பட்ட பெண் பக்தர்களாக இருந்தாலும் கூட, பணியிலிருக்கும் போலீஸ்காரர்களுக்கு பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் வந்து விட்டால், அவர்களுடைய வயதை சரி பார்க்க பேன்கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளார் அட்டை போன்ற போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை, காண்பிக்கும் படி கூறுகிறார்கள். இதில், ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே, அனுமதிக்கப்படுகிறார்கள். பெண் பக்தர்களின் வயதில் சந்தேகம் ஏற்பட்டு, இது போன்ற அடையாள அட்டை இல்லாத நிலையில், அவர்கள் பம்பையிலேயே நிறுத்தப்படுகின்றனர். எனவே, இந்த பெண் பக்தர்களால் அய்யப்பனை தரிசிக்க முடியாது. அதுமட்டுமின்றி, இவர்களுடன் வரும் ஆண் பக்தர்களும், இவர்களை தனியாக விட்டு விட்டு அய்யப்பனை தரிசிக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, இது போன்ற நடைமுறை சிக்கலை தவிர்க்க, பெண் பக்தர்கள் தங்களுக்கான அடையாள அட்டை மற்றும் அதற்கான போட்டோ காப்பியை எடுத்து செல்ல வேண்டும். இது போன்ற, விஷயங்களை சபரிமலைக்கு அழைத்து செல்லும் டிராவல்ஸ் நிறுவனங்களும், குருசாமிமார்களும் பெண் பக்தர்களுக்கு எடுத்து கூறுவது மிக மிக முக்கியம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் கார்த்திகை மாதம் மூன்றாவது சனிக்கிழமையையொட்டி ... மேலும்
 
temple news
மறைமலை நகர்; சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், பழமையான பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து, 1957 முதல், 1967ம் ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன்பூண்டியிலுள்ள திருமுருகநாதர் சுவாமி கோவிலில், 63 நாயன்மார்கள் மற்றும் ... மேலும்
 
temple news
ராம்நகர்; கவுடகெரேவின், சாமுண்டீஸ்வரி கோவில் நிர்வாகம், சிறார்களுக்காக புதிய உலகத்தையே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar