முத்துமாரியம்மன் கோவிலில் செடல் உற்சவ கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2015 11:07
புதுச்சேரி: முதலியார்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் 24ம் ஆண்டு செடல் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி மாலை 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து 6.00 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடந்தது. வரும் 31ம் தேதி மாலை 3.00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.