பண்ருட்டி முத்துமாரியம்மன் கோவிலில் 31ம் தேதி செடல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2015 12:07
பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் லைன் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிமாத செடல் திருவிழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நடந்தது. அதனையொட்டி, நேற்று (23ம் தேதி) காலை 7:00 மணிக்கு விநாயகர் பூஜை, பால்குடம் எடுக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. விழாவில் நகரமன்ற தலைவர் பன்னீர்செல்வம் உட்பட பலர் பங்÷ கற்றனர். இன்று (24ம் தேதி) முதல் தினமும் காலை, மாலை அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. வரும் 31ம் தேதி செடல் உற்சவம் நடக்கிறது.