கண்டாச்சிபுரம்: மேல்வாலை ஊராட்சி ஒடுவன்குப்பம் கிராமத்தில் ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கண்டாச்சிபுரம் அடுத்த மேல்வாலை ஊராட்சிக்கு உட்பட்ட ஒடுவன்குப்பம் கிராமத்தில் உள்ள ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி அதிகாலை 5:00 மணிக்கு கோ பூஜையுடன், நான்காம் கால பூஜை துவங்கியது. பின்னர் பாராயாணம், பூர்ணாஹூதி யாகத்துடன் கலச புறப்பாடு நடந்தது.காலை 9:20 மணிக்கு மூலஸ்தான அம்மன் மற்றும் கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இரவு வாசி அம்மன் மற்றும் ஸ்ரீரேணுகாபரமேஸ்வரி அம்மன் வீதியுலா நடந்தது. சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துக் கொண்டு அம்மனை வழிபட்டனர்.