பதிவு செய்த நாள்
14
ஜூலை
2011
11:07
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழாவின் உச்ச நிழச்சியாக நேற்று முப்பழ பூஜை நடந்தது. கோயிலில் ஜூலை 4ல் துவங்கிய ஊஞ்சல் திருவிழாவில் தினம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருளினர். 30 நிமிட ஊஞ்சலாட்டத்தின் போது, கோயில் ஓதுவார்களால் ஊஞ்சல் பாடல் பாடப்பட்டது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக நேற்று முப்பழ பூஜை நடந்தது. உச்சி கால பூஜையின்போது, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு, மா, பலா, வாழை என முக்கனிகள் படைக்கப்பட்டன. தீபாராதனைக்குப்பின்பு, ஊஞ்சலில் சுவாமி எழுந்தருளினார். பன்னிருதிருமுறை, திருப்புகழ், பொன்னூஞ்சல் பாடல் பாடப்பட்டது. திருமுறை இன்னிசை அரங்கு முடிந்து சுவாமி அருள்பாலித்தார்.