Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்
வத்ஸ அசுரன், பகாசுரன் வதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2015
04:07

1. தரல மதுக்ருத் வ்ருந்தே ப்ருந்தாவநே அத மநோஹரே
பசுப சிசுபி: ஸாகம் வத்ஸ அநுபாலந லோலுப:
ஹலதரஸக: தேவ ஸ்ரீமந் விசேரித தாரயந்
கவல முரளீ வேத்ரம் நேத்ர அபிராம தநு த்யுதி:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! மஹாலக்ஷ்மியின் நாதனே! தேவனே! காண்பவர்கள் கண்களுக்கு இதமாக உள்ளது போன்ற ஒளி பொருந்திய மேனியைக் கொண்டிருந்தாய். கைகளில் கலப்பை வைத்திருந்த பலராமனுடனும் மற்ற இடையர்களுடனும் இணைந்து, நீ கன்றுக்குட்டிகளை மேய்க்க விருப்பம் கொண்டாய். இதனால், தேன் மணத்தை விரும்பியபடி எங்கும் பரந்து திரிந்த வண்டுக் கூட்டங்கள் நிறைந்த ப்ருந்தாவனத்தில் - கொம்பு வாத்தியம், புல்லாங்குழல், குச்சி ஆகியவற்றைக் கைகளில் கொண்டு சுற்றினாய் அல்லவா?

2. விஹித ஜகதீ ரக்ஷம் லக்ஷ்மீ கர அம்புஜ லாலிதம்
தததி சரண த்வந்த்வம் ப்ருந்தாவநே த்வயி பாவநே
கிமிவ ந பபௌ ஸம்பத் ஸம்பூரிதம் தரு வல்லரீ
ஸலில் தரணீ கோத்ர க்ஷேத்ர ஆதிகம் கமலா பதே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா மஹாலக்ஷ்மியின் நாயகனே! உனது பாதங்கள் அனைத்து உலகையும் காத்து நிற்பவை; மஹாலக்ஷ்மியால், அவளது தாமரை போன்ற சிவந்த அழகிய கைகளால் எப்போதும் வருடப்படுபவை ஆகும். இத்தகைய சிறப்பான உனது பாதங்கள் ப்ருந்தாவனத்தில் உள்ள மரம், செடி, குளங்கள், மண், மலை ஆகியவற்றின் மீது பட்டன. இதனால் அவை எதுதான் செழிப்பு அடையவில்லை?

3. விலஸத் உலபே காந்தார அந்தே ஸமீரண சீதலே
விபுல யமுநாதீரே கோவர்த்தந அசல மூர்த்தஸு
லலித முரளீ நாத: ஸஞ்சா ரயந் கலு வாத்ஸகம்
க்வசந திவஸே தைத்யம் வத்ஸ ஆக்ருதிம் த்வம் உதைக்ஷதா:

பொருள்: குருவாயரப்பா! எங்கும் பசுமையாக இருந்த புல் தரைகளிலும், யமுனை நதியில் இருந்து வீசும் குளிர்ந்த காற்று உள்ள கரைகளிலும், கோவர்த்தன மலையின் உச்சியிலும் நீ மிகவும் இனிமையாக உனது புல்லாங்குழலை ஊதிக் கொண்டு, மாடுகளை மேய்த்து வந்தாய். அப்போது ஒரு நாள் கன்று உருவில் வந்த அசுரன் ஒருவனைக் கண்டாய் அல்லவா?

4. ரபஸ விலஸத் புச்சம் விச்சாயத: அஸ்யதீ விலோகயந்
கிமயி வலித ஸ்கந்தம் ரந்த்ர ப்ரதீக்ஷம் க்ஷிதம்
தம் அத சரணே பிப்ரத் விப்ராமயந்முஹு: உச்சகை:
குஹசந மஹா வ்ருக்ஷே சிக்ஷேபித க்ஷத ஜீவிதம்

பொருள்: குருவாயூரப்பா! அந்த அசுரன் தனது வாலை வேகமாக ஆட்டிக் கொண்டும், தனது கழுத்தைத் திருப்பி பார்த்துக் கொண்டும் (உன்னை கொல்ல சரியான நேரம் பார்த்து) இருந்தான். அவனது தீய பார்வையைப் புரிந்து கொண்டாய். அவன் கால்களைப் பிடித்துச் சுழற்றத் தொடங்கினாய். இதனால் அவன் உயிர் பிரிந்தது. அந்த உடலை ஒரு மரத்தின் மீது எறிந்தாய் அல்லவா?

5. நிபததி மஹா தைத்யே ஜாத்யா துராத்மநி தத்க்ஷணம்
நிபதந ஜவ க்ஷுண்ண க்ஷோணீ ருஹ க்ஷத காநநே
திவி பரிமிளத் வ்ருந்தா: வ்ருந்தாரகா: குஸும் உத்கரை:
சிரஸி பவத: ஹர்ஷாத் வர்ஷந்தி நாம ததா ஹரே

பொருள்: ஹரியே! குருவாயூரப்பா! பிறப்பிலேயே கொடியவனாகிய அந்த அசுரன் விழுந்த நேரத்தில் அங்கு இருந்த மரங்கள் அனைத்தும் நொறுங்கி விழுந்தன. இதனைக் கண்ட தேவர்கள் மகிழ்ந்து, ஆகாயத்தில் இருந்து உன் தலை மீது மலர்களைத் தூவினார்கள்.

6. ஸுரபிலதமா மூர்த்தநி ஊர்த்வம் குத: குஸும் ஆவலி
நிபததி தவ இதி உக்த: பாலை: ஸஹேலம் உதைரய:
ஜடிதி தநுஜ க்ஷேபேண ஊர்த்வம் கத: தருமண்டலாத்
குஸும் நிகர: ஸ: அயம் நூநம் ஸமேதி சநை: இதி

பொருள்: குருவாயூரப்பா! அந்த மலர்களைக் கண்ட ஆயர் சிறுவர்கள், மணம் வீசும் இந்த மலர்கள் உன் தலை மீது எங்கிருந்து வந்து விழுகின்றன? என்று வியப்புடன் கேட்டனர். அதற்கு நீ அவர்களிடம், நான் அசுரனை எறிந்தபோது மரத்தில் இருந்த மலர்கள் உயரமாகப் பறந்து விட்டன. அவையே இப்போது வந்து விழுகின்றன என்று நினைக்கிறேன் என்று விளையாட்டாக கூறினாய் அல்லவா?

7. க்வசந திவஸே பூய: பூயஸ்தரே பருஷ ஆதபே
தபந தநயா பாத: பாதும் கதா: பவத் ஆதய:
சலித க்ருதம் ப்ரேக்ஷமாஸு: பகம் கலு விஸ்ம்ருதம்
க்ஷிதிகர கருத் சேதே கைலாஸ சைலம் இவ அபரம்

பொருள்: குருவாயூரப்பா! ஒரு நாள் கடுமையான வெப்பம் நிலவியது. அன்று நீயும் உனது நண்பர்களும் தாகம் தீர்ப்பதற்காக யமுனை நதிக்குச் சென்றீர்கள். அப்போது, முன்பு ஒரு முறை இந்திரன் வெட்ட மறந்து விடப்பட்ட கயிலாய மலை போன்று விளங்கிய (பெரிய வெண்மையான) கொக்கு ஒன்றைக் கண்டாய் அல்லவா?

8. பிபதி ஸலிலம் கோப வ்ராதே பவந்தம் அபித்ருத:
ஸ: கில நிகிலந் அக்நி ப்ரக்யம் புந: த்ருதம் உத்வமந்
தளயிதும் அகாத் த்ரோட்யா: கோட்யா ததா து பவாந் விபோ
கல ஜந பிதா சுஞ்சு: சஞ்சூ ப்ரக்ருஹ்ய ததார தம்

பொருள்: குருவாயூரப்பனே! எங்கும் உள்ளவனே! நீங்கள் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது பகன் என்ற அந்த கொக்கு அசுரன் உன்னை விழுங்கினான். உடனே நீ நெருப்பு போன்று மாறினாய். இதனால் உன்னை வெளியில் உமிழ்ந்தான். மீண்டும் தனது பெரிய அலகின் மூலமாக உன்னைக் குத்திக் கிழிக்க வந்தான். ஆனால் தீயவர்களை அழிப்பதில் வல்லவனாகிய நீ; அவனது இரண்டு அலகுகளையும் பிடித்து இழுத்துக் கிழித்து அவனைக் கொன்றாய் அல்லவா?

9. ஸபதி ஸஹஜாம் ஸந்த்ரஷ்டும் வா ம்ருதாம் கலு பூதநாம்
அநுஜம் அகம் அபி அக்ரே க்தவா ப்ரதீக்ஷிதும ஏவ வா
சமந நிலயம் யாதே தஸ்மிந் பகே ஸுமந: கணே
கிரதி ஸுமநா: வ்ருந்தம் ப்ருந்தாவநாத் க்ருஹம் ஜயதா:

பொருள்: குருவாயூரப்பா! பகாசுரன் என்ற அந்த அசுரன் உன்னால் முன்பே கொல்லப்பட்ட பூதனையின் சகோதரன் ஆவான். தன்னுடைய சகோதரியான பூதனையைக் காண்பதற்காகவோ அல்லது உன்னால் கொல்லப்படப் போகும் அகாசுரன் என்ற தனது தம்பியை வரவேற்பதற்காகவோ இவன் இப்போது யமலோகம் சென்றான். உன்மீது தேவர்கள் மலர்கள் தூவினர். நீயும் ப்ருந்தாவனத்தில் உள்ள உனது வீட்டிற்குச் சென்றாய் அல்லவா?

10. லலித முரளீ நாதம் தூராந் நிசம்ய வதூ ஜநை:
த்வரிதம் உபகம்ய ஆராத் ஆரூட மோதம் உதீக்ஷித:
ஜநித ஜநநீ நந்த ஆநந்த: ஸமீரண மந்திர
ப்ரதித வஸதே சௌரே தூரீ குருஷ்வ மம ஆமயாந்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ வெகு தூரத்தில் வரும்போதே உனது இனிமையான குழல் ஓசையைக் கேட்ட கோபியர்கள் விரைவாக உன்னிடம் வந்தனர். அனைவரும் மகிழ்ந்தனர். உனது தாய்க்கும் நந்தகோபருக்கும் நீ மகிழ்ச்சி அளித்தாய். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளை நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar