சிதம்பரம் மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவ தேரோட்டம்!
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2015 11:07
சிதம்பரம்: சிதம்பரம், கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ஆடி பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரம்மோற்சவம் கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை மற்றும் வீதியுலா நடைபெற்று வருகிறது. ஐந்தாம் நாள் உற்சவமாக கடந்த 21ம் தேதி இரவு தெருவடைச்சானும், 10ம் நாள் உற்சவமான நேற்று தேரோட்டம் நடந்தது. அதனையொட்டி நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சிறப்பு தீபாராதனை நடந் தது. பின்னர் மாரியம்மன் புறப்பாடு செய்து நடராஜர் கோவில் கீழ சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியருளினார். பின்னர் நடராஜர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாரியம்மனுக்கு சபாநாயகர் கோவில் பொது தீட்சிதர்களின் சிறப்பு பூஜையை தொடர்ந்து தேரோட்டம் துவங்கியது. தேர் நான்கு வீதிகள் வலம் வந்து, பின்னர் வி.ஜி.பி., தெரு வழியாக மாலை கோவிலை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.