கும்மிடிப்பூண்டி: சித்தி விநாயகர் கோவிலில், மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி, எஸ்.பி.முனுசாமி நகரில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில், கடந்த ஜூன் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, தினமும், மண்டலாபிஷேகம் நடைபெற்றது.நேற்று, மண்டலாபிஷேக நிறைவு விழாவை முன்னிட்டு, கணபதி ஹோமம் வளர்த்து, சித்தி விநாயகருக்கு கலசாபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள், மண்டலாபிஷேகத்தில் கலந்து கொண்டு, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சித்தி விநாயகரை தரிசித்து வழிபட்டனர்.