பதிவு செய்த நாள்
29
ஜூலை
2015
05:07
1. த்வத் ஸேவ: உத்க: ஸௌபரி: நாம பூர்வம்
காலிந்தீ அந்த: த்வாதச அப்தம் தபஸ்யந்
மீத வ்ராதே ஸ்நேஹவாந் போக லோலே
தார்க்ஷ்யம் ஸாக்ஷாத் ஐக்ஷத அக்ரே கதாசித்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! முன்பு ஒரு காலத்தில் ஸௌபரி என்னும் ஒரு முனிவர் இருந்தார். அவர் உன்னைக் குறித்து காளிந்தீ என்ற குளத்தில் பன்னிரண்டு ஆண்டு கடுந்தவம் புரிந்தார். அந்தக் குளத்தில் இன்பமாக இருந்த சிறிய மீன்களுடன் நட்பாக இருந்தார். இப்படி இருக்கையில் ஒரு நாள் அவர் கருடனைக் கண்டார்.
2. த்வத் வாஹாம் தம் ஸக்ஷுதம் த்ருக்ஷ ஸுநும்
மீனம் கஞ்சித் ஜக்ஷதம் லக்ஷயந் ஸ:
தப்த: சித்தே சப்தவாந் அத்ர சேத் த்வம்
ஜந்தூத் போக்தா ஜீவிதம் ச அபி மோக்தா
பொருள்: குருவாயூரப்பா! அப்போது உன்னுடைய வாகனமான அந்தக் கருடன் அந்தக் குளத்தில் உள்ள ஒரு மீனைக் கொத்தி தின்றது. இதைக் கண்ட ஸௌபரி முனிவர் கோபம் கொண்டார். கருடனை நோக்கி, நீ இங்கு ஏதாவது ஒரு உயிரைக் கொன்றால், நீ உன் உயிரை இழப்பாய் என்று சாபம் கொடுத்தார்.
3. தஸ்மிந் காலே காலிய: க்ஷ்வேல தர்பாத்
ஸர்ப அராதே: கல்பிதம் பாகம் அச்நந்
தேந க்ரோதாத் த்வத் பத அம்போஜ பாஜா
பக்ஷ க்ஷிப்த தத் துராபம் பய: அகாத்
பொருள்: குருவாயூரப்பா! ஒரு முறை காளியன் என்ற ஒரு பெரிய நாகம், தன்னிடம் அதிகமாக விஷம் உள்ளது. என்று கர்வப்பட்டு, கருடனுக்காக வைக்கப்பட்டிருந்த உணவை உட்கொண்டது. அப்போது, உன்னுடைய திருவடிகளில் எப்போதும் பக்தி கொண்டவனான கருடன் அவன் மீது கோபம் கொண்டு, தன்னுடைய சிறகுகளால் அவனை அடித்தான். கருடனுக்குப் பயந்த காளியன், கருடன் வரமுடியாத இடமான (ஸௌபரியின் சாபத்தால்) காளிந்தி மடுவிற்கு வந்தான்.
4. கோரே தஸ்மின் ஸுரஜா நீர வாஸே
தீரே வ்ருக்ஷா: விக்ஷதா: க்ஷ்வேல வேகாத்
பக்ஷி வ்ரதா: பேது: அப்ரே பதந்த:
காருண்ய ஆர்த்ரம் த்வத் மந: தேந ஜாதம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தக் குளத்தில் இருந்த காளியனின் கொடிய விஷம் காரணமாக அங்கு கரையில் இருந்த அனைத்து மரங்களும் பொசுங்கின. அந்தக் குளத்தின் மீது ஆகாயத்தில் பறக்கும் பறவைகள் கூட இறந்தன. இதனை அறிந்த கருணை மிக்க உனது மனம் நெகிழ்ந்தது.
5. காலே தஸ்மின் ஏகதா ஸீர பாணிம்
முக்த்வா யாதே யாமுநம் காநந அந்தம்
த்வயி உத்தாம க்ரீஷ்ம பீஷ்ம ஊஷ்ம தப்தா:
கோ கோபாலா: வ்யாபிந் க்ஷ்வேல தேயாம்
பொருள்: குருவாயூரப்பா! ஒரு நாள் நீ யமுனையின் கரைகளில் உள்ள காட்டிற்குச் சென்றாய். அன்று உன்னுடன் பலராமன் வரவில்லை. மிகுதியான வெயில் காரணமாக கடும் தாகம் ஏற்பட்டது. அதனால் உன்னுடன் வந்த பசுக்களும் ஆயர் சிறுவர்களும் விஷம் நிறைந்த அந்த மடுவின் நீரைக் குடித்தனர்.
6. நச்யத் ஜீவாந் விச்யுதாந் க்ஷ்மா தலே தாந்
விச்வாந் பச்யந் அச்யுத த்வம் தயா ஆர்த்ர:
ப்ராப்ய: உபாந்தம் ஜீவயாமாஸித த்ராக்
பீயூஷ அம்ப: வர்ஷிபி: ஸ்ரீகடாக்ஷை:
பொருள்: அடியார்களை நழுவ விடாத அச்சுதனே! குருவாயூரப்பா! அந்த நீரைக் குடித்ததால் அனைவரும் தரையில் உயிர் இழந்து வீழ்ந்தனர். அவர்களைக் கண்ட நீ, அவர்கள் அருகில் சென்று, அமிர்தம் போன்ற உனது கடைக்கண் பார்வையை அவர்கள் மீது செலுத்தி, அவர்கள் உயிரை மீட்டாய்.
7. கிம் கிம் ஜாத: ஹர்ஷ வர்ஷ அதிரேக:
ஸர்வ அங்கேஷு இதி உத்திதா கோப ஸங்கா:
த்ருஷ்ட்வா அக்ரே த்வாம் த்வத் க்ருதம் தத் விதந்த:
த்வாம் ஆலிங்கந் த்ருஷ்ட நாநா ப்ரபாவ:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! எழுந்த இடைச்சிறுவர்கள், என்ன நடந்தது? என்ன நடந்தது? எங்கள் உடலில் ஆனந்தம் பெருகி உள்ளதே என்று வியந்தனர். உன்னைக் கண்டனர். பலமுறை உனது செயல்களைக் கண்டிருந்த அவர்கள் இம்முறையும் உன்னால் ஏதோ அதிசயம் நடந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். உன்னை நன்றாகத் தழுவிக் கொண்டனர் அல்லவா?
8. காவ: ச ஏவம் லப்த ஜீவா: க்ஷணேந
ஸ்பீத ஆநந்தா: த்வாம் ச த்ருஷ்ட்வா புரஸ்தாத்
த்ராக் ஆவவ்ரு: ஸர்வத: ஹர்ஷ பாஷ்பம்
வ்யாமுஞ்சந்த்ய: மந்தம் உத்யந் நிநாதா:
பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக பசுக்களும் ஒரு நொடியில் உயிர் பிழைத்து எழுந்தன. அவையும் தங்கள் கண்களில் நீர் பெருக எதிரில் இருந்த உன்னைக் கண்டன. மெதுவாகக் குரல் எழுப்பியபடி உன்னைச் சுற்றிச் சூழ்ந்து நின்றன.
9. ரோமாஞ்ச: அயம் ஸர்வத: சரிரே
பூயஸீ அந்த: காசித் ஆநந்த மூர்ச்சா
ஆச்சர்ய: அயம் க்ஷ்வேல வேக: முகுந்த இதி
உக்த: கோபை: நந்தித: வந்தித: அபூ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அந்தச் சிறுவர்கள் உன்னிடம், முகுந்தா! எங்கள் உடல் எங்கும் மெய் சிலிர்க்கிறது. எங்கள் மனதில் விளக்க முடியாத ஆனந்தம் பரவி நிற்கிறது. நாங்கள் உண்ட இந்த விஷத்தின் செயல் வித்தியாசமாக உள்ளது. என்று கூறியபடி உன்னை வணங்கினர். (அவர்கள் தங்கள் ஆனந்தம் விஷத்தால் உண்டாயிற்று என்று நினைத்தனர்.)
10. ஏவம் பக்தாந் முக்த ஜீவாந் அபி த்வம்
முக்த அபாங்கை: அஸ்த ரோகாத் தநோதி
தாத்ருக் பூத ஸ்பீத காருண்ய பூமா
ரோகாத் பாயா: வாயுகேஹ அதிநாத
பொருள்: குருவாயூரப்பா! இப்படியாக உன்னை அடைந்த அடியார்கள், அவர் உயிர் இல்லாதவர்களாக இருந்தாலும் உனது அழகிய கருணை மிகுந்த கடைக்கண் பார்வையால் அவர்களைப் பிழைக்க வைத்து, நோய் என்பதே இல்லாமல் ஆக்கி விடுகின்றாய். அந்த அளவு காருண்யம் கொண்ட நீ எனது பிணிகளில் இருந்து என்னைக் காப்பாற்ற வேண்டும்.