தூத்துக்குடி மாவட்டத்தில் அப்துல் கலாமுக்கு சர்வ சமய பிரார்த்தனை: சிறப்பு தொழுகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2015 12:07
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கலாம் மறைவு காரணமாக சர்வசமய பிரார்த்தனை நடந்தது. இதில் சர்வகட்சியினர் பங்கேற்றனர். கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அடக்கம் நேற்று ராமேஸ்வரத்தில் நடந்தது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. மருந்து கடைகள், ஒரு சில இடங்களில் டீக்கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்கள், அரபிக்கல்லூரியில் சிறப்பு தொழுகைகள் நடந்தது. ராஜாஜி பூங்காவில் சர்வசயத்தினர் சார்பில் பிரார்த்தனை நடந்தது. இதில் தமிழ்நாடு சுன்னத்கமிட்டி, தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாஜஹான், பிஷப் லயோலா, சிவன் கோயில் அர்ச்சகர் சங்கரராமன் ஆகியோர் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து கட்சியினரும் பங்கேற்றனர். பல் வேறு அமைப்புகள் சார்பில் அனைத்து இடங்களிலும் அப்துல்கலாம் படம் வைக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. மீனவர்கள் சார்பில், 265 விசைப்படகுகள், ஆயிரக்கணக்கான நாட்டு, பைபர் படகுகள் கடலுக்குசெல்லவில்லை. அவர்கள் அப்துல் கலாம் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.