கன்னியாகுமரி பகவதி அம்மன் அன்னதான உண்டியலில் 36 ஆயிரம் ரூபாய் வசூல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2015 12:07
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில்தினமும் அன்னதானம் நடக்கிறது. திருக்கோயில் திட்ட நிதி மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக வாடாவிளக்கு மண்டபத்தில் தனி உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இறுதியில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டு அது அன்னதான கணக்கில் சேர்க்கப்படும். இந்த ஆண்டு உண்டியல் திறக்கப்பட்டு எண்ணிய போது 36 ஆயிரத்து 467 ரூபாய் வசூல் ஆகியிருந்தது.