பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஆக 2015 12:08
கடலூர்: கடலூர், மஞ்சக்குப்பம் பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. கடலூர், மஞ்சக்குப்பம் பகவதி கழுத்து மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா கடந்த 29ம் தேதி துவங்கியது. அதனையொட்டி தினமும் காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகமும், இரவு மகா தீபாராதனை நடந்தது. நேற்று காலை கரம் வீதியுலா வந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சாகை வார்த்தலும், இரவு சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.