பதிவு செய்த நாள்
01
ஆக
2015
12:08
புதுச்சேரி:புத்துமாரியம்மன் கோவில், ஆடித்திருவிழாவையொட்டி, அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது.கதிர்காமம், தட்சிணாமூர்த்தி நகரில், புத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஆடித்திருவிழா, கடந்த 30ம் தேதி துவங்கியது. அன்று மாலை 4:30 மணிக்கு ரக்ஷாபந்தன பூஜை, கலச பூஜை, விநாயகர் வழிபாடு, மாலை 6:30 மணிக்கு, மகா அபிஷேகத்துடன், கலசாபிஷேகம் நடந்தது.நேற்று காலை 6:00 மணிக்கு, பரிவார மூர்த்திகளுக்கு பால் அபிஷேகம், அம்மனுக்கு விசேஷ திரவிய அபிஷேகம் மற்றும் 108 லிட்டர் பால் அபிஷேகமும், மகா தீபாராதனையும், பகல் 12:00 மணிக்கு கூழ் படைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.அதனை தொடர்ந்து, இன்று (1ம் தேதி) மாலை 6.00 மணிக்கு, மஞ்சள் நீராட்டு மற்றும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவல் குழுத் தலைவர் சம்பத், கவுரவத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் கணேசன், பொருளாளர் ராஜி செய்திருந்தனர்.